25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
img 4641
அசைவ வகைகள்

தேங்காய்ப்பால் இறால் குழம்பு

தேவையான பொருட்கள் :

இறால் – அரை கிலோ
உப்பு – தேவைக்கு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தக்காளி – 1
புளிச்சாறு – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 1

அரைக்க :

துருவிய தேங்காய் – 1 கப்
கொத்தமல்லி – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 5
வெங்காயம் – 1
கறிவேப்பிலை சிறிது
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிக்க :

பெருஞ்சீரகம், கடுகு, பட்டை, கறிவேப்பிலை.
img 4641
செய்முறை :

* இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வறுத்து ஆற வைக்கவும்,

* வறுத்த பொருட்கள் நன்றாக ஆறியதும் அதை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கடுகு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த மசாலா, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* குழம்பு பதம் வந்தவுடன் அதில் சுத்தம் செய்த இறால்களை சேர்த்து 10 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான தேங்காய்ப்பால் இறால் குழம்பு ரெடி!

Related posts

மட்டன் பிரியாணி ! பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்

nathan

ரம்ஜான் ஸ்பெஷல்: கப்ஸா சோறு

nathan

சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் இறால் குழம்பு

nathan

சூப்பரான முட்டை பணியார குருமா

nathan

பசலைக்கீரை முட்டை பொரியல்

nathan

பஞ்சாபி சிக்கன்

nathan

மலபார் சிக்கன் ரோஸ்ட்

nathan

மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

nathan

சுவையான அவித்த முட்டை மிளகு பிரட்டல்

nathan