25.8 C
Chennai
Monday, Jan 13, 2025
download 1
கால்கள் பராமரிப்பு

வேப்பிலை பயன்படுத்தி எப்படி குதிகால் வெடிப்பை குணப்படுத்த முடியும்?

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், குதிகால் வெடிப்பை குணமாக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். குதிகால் வெடிப்பால், அதில் மண் புகுந்து துன்புறுத்தும். கிருமிகள் ஊடுருவி தோல்நோயாக மாறும். விரல் இடுக்குகளில் அரிப்பு ஏற்பட்டு புண் உண்டாகும். காலில் ஏற்படும் வெடிப்பு, விரல் இடுக்கு, பாதங்களில் உண்டாகும் தோல் நோய்களை குணப்படுத்தும் மருந்துகளை செய்முறையில் காணலாம்.

மாம்பருப்பை பயன்படுத்தி குதிகால் வெடிப்புக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாம்பருப்பு, விளக்கெண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். அரைத்து வைத்திருக்கும் மாம்பருப்பு சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி ஆறவைத்து பூசிவர குதிகால், உள்ளங்கால் மற்றும் கைகளில் ஏற்படும் வெடிப்பு சரியாகும். பூஞ்சை காளான்களால் ஏற்படும் தோல் வெடிப்பு, விரல் இடுக்குகளில் உண்டாகும் அரிப்பு குணமாகும். மாங்கொட்டை வயிற்றுப்போக்குக்கு மருந்தாகிறது. மாங்கொட்டையில் பாதி அளவு எடுத்து நெருப்பில் சுட்டு சாப்பிடும்போது கழிச்சல் பிரச்னை தீரும். மாங்கொட்டை ரத்தத்தை உறையவைக்கும் தன்மை உடையது.

வேப்பிலையை பயன்படுத்தி குதிகால் வெடிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வேப்பிலை, மஞ்சள் பொடி, விளக்கெண்ணெய். செய்முறை: வேப்பிலையை அரைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் பொடி, விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, வெடிப்பு உள்ள இடத்தில் தினமும் பூசிவர குதிகால் வெடிப்பு சரியாகும். பூஞ்சை காளான்களால் ஏற்படும் கால் வெடிப்பு, விரல் இடுக்குகளில் அரிப்பு, நகச்சொத்தை ஆகியவை குணமாகும்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வேம்பு, மஞ்சள் சேரும்போது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது. மஞ்சள், வேம்பு ஆகியவற்றை நீரில் போட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து குளிப்பதால், அம்மைநோய் விலகிப்போகும். அம்மை கொப்புளங்கள் ஆறிப்போகும். அம்மையால் உண்டான வடுக்கள் மறையும்.சோற்றுக் கற்றாழையை பயன்படுத்தி பாத வெடிப்பை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோற்றுக்கற்றாழை, தேங்காய் எண்ணெய், மஞ்சள் பொடி. செய்முறை: ஒரு பாத்திரத்தில், சோற்றுக் கற்றாழையின் சதை பகுதியை எடுக்கவும். இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். பின்னர் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து பூசிவர பாதவெடிப்பு, சேற்றுப்புண் சரியாகும். பாதவெடிப்பை பித்த வெடிப்பு என்றும் சொல்வதுண்டு. பாத வெடிப்புக்கு இந்த தைலம் அற்புதமான மருந்தாக விளங்குகிறது.ஆசனவாய் கடுப்பை சரிசெய்யும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். சாலையோரங்களில் பார்க்க கூடிய மஞ்சள் நிற பூக்களை உடைய துத்தி செடியின் இலைகளை சுத்தம் செய்து எடுக்கவும். இதனுடன் பாசிப்பயிறு சேர்த்து கீரையாக கடைந்து சாப்பிட்டுவர ஆசனவாய் கடுப்பு இல்லாமல் போகும்.download

Related posts

அழகான பாதங்கள் பெறுவது எப்படி?

nathan

கால், கை முட்டிப்பகுதி கருமையை போக்கும் வழிகள்

nathan

வீராசனம்

nathan

பித்த வெடிப்பா கவலையை விடுங்கள்..!

nathan

கால்களை பராமரிப்பது எப்படி?

nathan

கால்களையும் கொஞ்சம் கவனியுங்கள்! Tips to Care your feet

nathan

பாதவெடிப்பு பிரச்னைக்கான தீர்வு..முயன்று பாருங்கள்

nathan

பனிக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?

nathan

நமது பாதங்கள் அன்றாடம் நம்மிடம் படும்பாடு சொல்லிமாளாது…..

sangika