25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
மருத்துவ குறிப்பு

கர்ப்பிணிகள் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானங்கள்

 

கர்ப்பிணிகள் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானங்கள்

எனவே தான் பெண்களை கர்ப்ப காலத்தில் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளச் சொல்கின்றனர். கர்ப்ப காலத்தில் தண்ணீரை அதிகம் குடிப்பதுடன், நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்குமாறான பானங்களை பருக வேண்டும். இப்போது கர்ப்பிணிகள் குடிப்பதற்கு உகந்த ஆரோக்கிய பானங்களைப் பார்க்கலாம்…

• கர்ப்பிணிகள் க்ரீன் டீ குடிப்பது நல்லதல்ல. ஆனால் உண்மையில் கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் அளவாக குடித்து வந்தால், ஆரோக்கியமாக இருக்கலாம். குறிப்பாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

• கர்ப்பிணி பெண்களுக்கு பால் பொருள்களை எடுத்து கொள்ளவதால் அவர்களின் உடலில் நீர்ச்சத்து மட்டுமின்றி, கால்சியமும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, பாலானது செரடோனின் அளவை அதிகரித்து, மனதை அமைதிப்படுத்தும். ஆகவே கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 2 முறை தவறாமல் பால் குடிக்க வேண்டும்.

• ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால், இதனை கர்ப்பிணிகள் குடித்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றல் அதிகரித்து, கர்ப்ப காலத்தில் நோய் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமின்றி, ஆரஞ்சு ஜூஸ் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவியாக இருக்கும்.

• கர்ப்பிணிகளுக்கு அவகேடோ மிகவும் ஆரோக்கியமான பழம். எனவே அத்தகைய பழத்தை ஸ்மூத்தி போன்று செய்து குடித்தால், இரத்த அழுத்தம் சீராக இருப்பதுடன், உடலில் உள்ள மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களும் சீராக இயங்கும்.

• கர்ப்ப காலத்தில் காலை வேளையில் ஏற்படும் சோர்விற்கு கர்ப்பிணிகள் இஞ்சி டீ வைத்துக் குடித்தால், அதனை உடனே சரிசெய்யலாம். அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணிகள் இஞ்சி டீயை குடிக்கும் போது, அவர்களின் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

Related posts

ஒரு ஆய்வு தெரி விக்கிறது … முத்த மருத்துவம் (THE KISS TREATMENT)

nathan

எனது மார்பகக்காம்புகளிலிருந்து சில மாதகாலமாக பால் போன்ற திரவம் வெளியேறுகின்றது. இதற்கு என்ன காரணமாக …

nathan

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தம்! தெரிந்துகொள்வோமா?

nathan

தும்மல் வர காரணங்கள்

nathan

அபார்ஷனிலேயே இத்தனை வகைகள் உள்ளதா?உஷாரா இருங்க…!

nathan

அல்சரை குணப்படுத்தும் கொடுக்கா புளி

nathan

எளிய மருத்துவம்-இய‌ற்கை வைத்தியம்!

nathan

நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பைத் தடுக்கும்

nathan

இருமலைப் போக்க எளிய வீட்டு மருத்துவக் குறிப்புகள்!!!!

nathan