27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
waist lose tips 23 1456201683
தொப்பை குறைய

இடுப்பளவை 8 இன்ச் குறைக்கலாம்!

உடல் எடையைக் குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்களா? இருந்தாலும் எந்த பலனும் கிடைத்ததில்லையா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டீயை தினமும் 3 கப் குடித்து வந்தால், உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.

ஏனெனில் இந்த டீயில், உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்கும் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் அதிகப்படியான கலோரிகள் கரைவதோடு, இந்த டீயைக் குடித்தால் செரிமான மண்டலம் சீராக செயல்படும்.
குறிப்பாக இந்த டீயை ஒரு நாளைக்கு மூன்று கப் குடித்து வந்தால், விரைவில் இடுப்பளவும், உடல் எடை குறைவதையும் நீங்கள் காண முடியும். சரி, இப்போது அந்த டீ குறித்து காண்போம்.

பட்டை உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, கல்லீரல் அதிகப்படியான சர்க்கரையை கொழுப்புக்களாக மாற்றி உடலில் தங்க வைக்கும். ஆனால், பட்டை உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைக்கும். மேலும் பட்டை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து அதிகப்படியான சர்க்கரையை உடைத்து, கொழுப்புக்களை கரைத்து உடலுக்கு ஆற்றலாக வழங்கும்.

பிரியாணி இலை பிரியாணி இலை உடலில் உள்ள அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றும், செரிமானத்தை மேம்படுத்தும், வயிற்று உப்புசத்தைக் குறைக்கும், வாய்வு தொல்லையைத் தடுக்கும். முக்கியமாக இந்த பிரியாணி இலையில் உள்ள லிமோனைன் என்னும் பொருள், பட்டையுடன் சேரும் போது, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும்.

தேவையான பொருட்கள் தண்ணீர் – 800 மிலி க்ரீன் டீ பவுடர்- 1 டேபிள் ஸ்பூன் பட்டை – 1 துண்டு பிரியாணி இலை – 3 தேன் – சுவைக்கேற்ப

செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் பட்டை, பிரியாணி இலை, க்ரீன் டீ பவுடர் ஆகியவற்றை சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

குடிக்கும் நேரங்கள் முதலில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மற்ற இருமுறை நீங்கள் சாதாரணமாக டீ பருகும் நேரங்களில் பருகலாம்.

குறிப்பு உங்கள் இடுப்பளவு மற்றும் உடல் எடை வேகமாக குறைய வேண்டுமானால், இந்த டீயை தினமும் குடிப்பதோடு, தவறாமல் உடற்பயிற்சியையும், டயட்டையும் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நல்ல மாற்றத்தை விரைவில் காண முடியும்.

எச்சரிக்கை இந்த டீயை கர்ப்ப காலத்திலோ அல்லது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலங்களிலோ பருகக்கூடாது. குழந்தைகளுக்கும், பெருங்குடல் பிரச்சனைகளைக் கொண்டவர்களும் இந்த டீயைக் குடிக்கக்கூடாது.
waist lose tips 23 1456201683

Related posts

தொப்பையை குறைக்க சில புத்திசாலித்தனமான ஐடியாக்கள்

nathan

நெல்லிக்காயை வச்சிக்கிட்டே தொப்பையை விரட்டலாம்…தெரிஞ்சிக்கங்க…

nathan

தொப்பையை வேகமாக குறைக்க உதவும் யோகாசனங்கள்!

nathan

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள்!

nathan

தொப்பை உள்ளவர்கள் செய்யவேண்டிய அர்த்த கோமுகாசனம்

nathan

உங்களுக்கு தெரியுமா எவ்வளவு பெரிய தொப்பையும் இந்த டீ குடிச்சா குறைஞ்சிடுமாம்…

nathan

சூப்பர் டிப்ஸ்! தொப்பை போடுவதை தடுக்க பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்…!!

nathan

42 கிராம் பாதாம் தொப்பையில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்

nathan

இந்த பொருளை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டா, மூன்று மடங்கு வேகமாக தொப்பை குறையும். சூப்பர் டிப்ஸ்…

nathan