வளையல் என்பது பாரம்பரிய அணிகலனாகும். தங்கம் மற்றும் கண்ணாடி வளையல் ஆரம்பகாலத்தில் அணிந்தாலும் தற்பொழுது பிளாஸ்டிக் வளையல்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வளையல் அணிவதன் முக்கிய நோக்கம் ஹார்மோன்களின் குறைப்பாடுகளை களைவதாகும்.
பிறந்தது முதல் நமது உடலில் ஹார்மோன்களின் குறைப்பாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதனால் அக்காலத்தில் இறுதிவரை வளையல் அணிதல் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.
அதிலும் கர்ப்பமான பெண்களுக்கு வளையல் அணிவிக்கும் வளைகாப்பு சடங்கு முக்கியம் பெறுகிறது நமது பாரம்பரியத்தில். வளையல் அணிவதால் சுவாசப்பாதை அழற்சி, ஆஸ்துமா போன்றவை குறையும். நன்றாக தூக்கம் வரும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கவும் உடல் சூடு தணியவும் இந்த வழக்கம் நடைமுறைக்கு வந்தது.