23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
29 1501308908 4
சரும பராமரிப்பு

முட்டை ஓட்டை குப்பையில் போடுவதற்கு பதிலா முகத்துல போட்டா என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?!

நம் சமையலறைகளில் பயன்படுத்தும் எந்தப் பொருட்களையும் வீணாக்காமல் பயன்படுத்த முடியும். இதற்கு ஓர் உதாரணம் தான் முட்டை. முட்டை உடல் நலனுக்கு நல்லது, தலைமுடிக்கு நல்லது என்று விதவிதமாக பயன்படுத்திருப்போம். ஆனால் தேவையற்றது என்று தூக்கிப்போடும் முட்டை ஓட்டில் எத்தனை நன்மைகள் இருக்கிறது தெரியுமா? அழகுக்காக முட்டை ஓட்டை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

கவனம் : முட்டையின் ஓட்டை பயன்படுத்துவதற்கு முன்னால் நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டிய சில விஷயங்கள்

முட்டையை இரண்டாக உடைத்த பின்னர் அதனை சுத்தமாக கழுவ வேண்டும். தண்ணீரை பாத்திரத்தில் பிடித்து கழுவுவதை விட ரன்னிங் வாட்டரில் கழுவினால் நல்லது. அதனை சுத்தமாக கழுவிய பின்னர் ஒரு பாத்திரத்தில் போட்டு முழுவதும் நொறுங்கிடமாறு பொடி செய்யுங்கள். முடிந்தளவு சின்ன சின்ன துகள்களாக்கிவிடுங்கள். அதனை ஒரு ஷீட்டில் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வரை 150 டிகிரி ஹீட்டில் பேக் செய்யுங்கள். அப்போது தான் அதிலிருக்கும் கிருமிகள் அழிந்திடும். இப்போது இதனை பயன்படுத்தலாம்.
29 1501308908 4
பேஸ் மாஸ்க் : பேக் செய்து வைத்திருக்கும் முட்டையின் ஓடுகளைத் தான் பயன்படுத்த வேண்டும். முட்டையின் ஓட்டை நன்றாக மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் இன்னொரு முட்டையை உடைத்து அதிலிருக்கும் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக பிரித்து மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் சேர்த்து நன்றாக கிளறுங்கள். பேஸ்ட் பதத்தில் அரைத்த இதனை முகத்தில் பூசி 20 நிமிடங்களில் கழுவிவிடலம. இது முகத்திற்கு ஈரப்பதத்தை வழங்கிடும். அத்துடன் ஃப்ரஷ்ஷாக வைத்திருக்கும்.
29 1501308695 3
சுருக்கம் : முகச்சுருக்கத்தை தடுக்க அதோடு முகச்சுருக்கம் வந்திருந்தால் அதனை தவிர்க்க இதனை செய்யலாம். முட்டையின் ஓட்டை பொடியாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் தயிர் இரண்டு டேபிள் ஸ்பூன் கலந்து முகத்தில் பூசுங்கள். அது காய்ந்ததும் கழுவி விடலாம்.
29 1501308733 7
சரும அரிப்பு : சருமத்தில் எங்காவது அலர்ஜி அரிப்பு ஏற்ப்பட்டிருந்தால் இந்த முறை உங்களுக்கு கை கொடுக்கும். பொதுவாக ட்ரை ஸ்கின்னாக இருப்பவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் நிறைய வரும். அவர்கள் ஆப்பிள் சிடர் வினிகரில் முட்டையின் ஓட்டை கலந்து ஐந்து மணி நேரம் ஊற வைத்திட வேண்டும். பின்னர் மெல்லிய துணியோ அல்லது காட்டன் பால் கொண்டு கலவையை தொட்டு அலர்ஜி வந்த இடத்தில் வைத்தால் நல்ல பலன் கிடைத்திடும்.
29 1501308714 5
கண்கள் : கண்களுக்கு கீழே கருவளையம், வறட்சியால் ஏற்படும் மார்க்குகளை தவிர்க்க இதனை செய்திடுங்கள். முட்டை ஓடு பொடியை இரண்டு டீஸ்ப்பூன் எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் தேன் கலந்து கண்களைச் சுற்றி அப்ளை செய்து லேசாக மசாஜ் கொடுத்திடுங்கள். இதனை தினமும் செய்யலாம்.
29 1501308724 6
பற்கள் : முட்டை ஓட்டில் கால்சியம் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை சருமத்திற்கு மட்டுமல்ல பற்களுக்கும் நல்ல பலனளிக்கும். தினமும் பல் விளக்கியவுடன் முட்டையின் ஓட்டு பவுடரைக் கொண்டு பற்களை தேயுங்கள் இது நல்ல பலன் கொடுத்திடும்.
29 1501308676 2
மிருதுவான சருமம் : முட்டை ஓட்டின் பொடியுடன் கற்றாழை ஜெல் மற்றும் தேன் ஒரு டீஸ்ப்பூன் கலந்து முகத்தில் பூசி வந்தால் சருமம் மிருதுவாகும். வாரம் இரண்டு முறை இதனை செய்திடலாம்.

Related posts

கற்றாழையின் சரும பராமரிப்பு

nathan

உங்களுக்கு அழகை அள்ளித் தரும் 6 அற்புத எண்ணெய்கள் !!

nathan

முகத்தை பொலிவாக்கும் ஆலிவ் எண்ணெய்!

nathan

நீங்கள் முதுகையும் கொஞ்சம் கவனிங்க!

nathan

அழகே… ஆரோக்கியமே.. பளபள தோலுக்கு பாதாம்

nathan

தெரிந்துகொள்வோமா? சரும பிரச்சனைகளை போக்கும் வேப்பிலை பேஷியல் செய்வது எப்படி????

nathan

சுருக்கம் இல்லாத சருமம் வேண்டுமா ?

nathan

குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்

nathan

உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்க இத படிங்க!

sangika