நம் இந்தியாவில் கணக்கிலடங்கா அற்புத மூலிகைகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவை மிகச் சாதரணமாக சாலையோரத்திலும், வேலிகளிலும் வளர்கின்றது நம் அதிர்ஷ்டம். ஆனால் நாம் எத்தனை பேர் அந்த மூலிகைகளின் குணங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்கிறோம்.
பல வித நோய்கள தீர்க்கக் கூடிய மிகச் சாதரணமாக விளையக் கூடிய செடிகள்தான் அரிய நோய்களையும்,. ஆபத்தையும் போக்குகின்றன. அவற்றைப் பற்றியும், அதன் நன்மைகளைப் பற்றியும் காண்போம்.
அருகம்புல்
மூல வியாதியை குணப்படுத்தும். விஷத்தின் வீரியத்தை முறிக்கும். அல்சர் வரமல் காக்கும். ஆஸ்துமா, சர்க்கரை நோயயை கட்டுப்படுத்தும்.
நில வேம்பு:
காய்ச்சல் மற்றும் கபம் அகற்றும். தலையில் நீர் கோர்த்திருந்தால் அதனை வற்றச் செய்யும்.
வல்லாரை:
ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும்., காமாலைக்கு மருந்தாகிறது. மலச்சிக்கலை குணப்படுத்தும்.
நெல்லிக்காய்:
பித்தத்தை தணிக்கும். ரத்த சோகையை குணப்படுத்தும். , கபத்தை கரைக்கும். மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்.
வெந்தயம்:
பித்தத்தையும் உடல் சூட்டையும் தணிக்கும். சர்க்கரையை கட்டுப்படுத்தும். காச நோய்க்கு மருந்தாகும்.
ரோஜாபூ:
இதயத்தை பலப்படுத்தும். , கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறு நீரக கோளாறுகளை குணப்படுத்துகிறது. வயிற்றுப் போக்கை சரிசெய்கிறது.
திரிபலாசூரணம் :
வாய்ப்புண்ணை ஆற்றுகிறது. மலச்சிக்கலை குணப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்களை வராமல் தடுக்கிறது. –
Related posts
Click to comment