29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
macham 1
மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு இந்த இடத்துல மச்சம் இருந்தால் செம லக்காம் ..!

ராசி, நட்சத்திரம், ஜாதகம், கைரேகை வைத்து ஒருவரை பற்றி கூறுவது போலவே, ஒருவரது உடலில் இருக்கும் மச்சங்களை வைத்தும் சிலர் அவர்களை பற்றி கூற முடியும் என்கிறார்கள். மச்சம் என்பது பெண்களுக்கு ஒரு அழகும் கூட. அது எங்கு அமைகிறது என்பதை பொறுத்திருக்கிறது.
பொதுவாக மச்சம் கருப்பு நிறத்தில் இருக்கும் என்றாலும் சிலரது சரும நிறம் சார்ந்து அது தேன், சிவப்பு, பச்சை நிறங்களில் கூட காணப்படும். இந்த நிறத்தில் அமையும் மச்சங்கள் நல்ல லக் என்று கூறுகின்றனர். மச்சங்கள் அதிகமாக இருந்தால் லக் அதிகமாக இருக்குமாம். இதற்காக தான் மச்சக்காரன் என்று கூறுகிறார்களோ என்னவோ.

நெற்றி!
முகத்தின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணின் வாழ்வில் செல்வமும், ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இவர்கள் கடவுள் நம்பிக்கையில் ஆழமாக இருப்பார்கள். இதுவே இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களது வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையாது என கூறுகின்றனர். இவர்கள் மத்தியில் சுயநலம் இருக்கும். மிக செல்லமாக இருப்பார்கள்.

நெற்றிப்பொட்டில்!
வலது புற நெற்றிப்பொட்டில் மச்சம் இருந்தால் அவர்கள் நேர்த்தியாகவும், சீக்கிரமாக திருமணம் செய்துக் கொள்பவருமாக இருப்பார்கள். இவர்களுக்கு அமையும் கணவர்களும் நல்லவர்களாக இருப்பார்கள். இடது புறத்தில் மச்சம் இருந்தால் இவர்களது திருமண வாழ்க்கை சற்று சறுக்கல்களை சந்திக்கும். புரிதல், முதிர்ச்சி இல்லாமல் கணவன் – மனைவி இல்லற வாழ்வில் ஈடுபடுவர்கள்.

கண்ணிமை!
வலது புற கண்ணிமையில் மச்சம் இருந்தால் அவர்கள் நிதானமாக செயல்படுவார்கள். பணம் மெல்ல, மெல்ல தான் சேமிப்பார்கள். இவர்களுக்கு ஏற்படும் நெருக்கடி உடனே சரியாகிவிடும். இடது புறத்தில் மச்சம் இருந்தால், இவர்களது குணாதிசயங்கள் அவ்வளவு சிறப்பாக இருக்காது. தன்னலம் மட்டும் தான் பார்ப்பார்கள். பிறர் நலம் பார்க்க மாட்டர்கள். வாழ்க்கையில் நிலையற்று செயல்படுவார்கள்.macham 1

கண்கள்!
வலது கண்ணில் மச்சம் இருந்தால், அவர்கள் மிகவும் லக்கானவர்கள். செல்வம் அவர்களிடம் அதிகம் சேரும். வாழ்க்கையில் பெரிதாக சிரமப்பட மாட்டார்கள். இன்பமான வாழ்க்கை அமைந்து காணப்படுவார்கள். இடது கண்ணில் மச்சம் இருந்தால், அவர்கள் எதையும் பெரிதாக எண்ண மாட்டார்கள். இவர்களது அணுகுமுறை காரணத்தாலேயே திருமண வாழ்வில் சிக்கல்கள் உண்டாகலாம்.

மூக்கு!
மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு வெடுக்கு வெடுக்குன்னு கோபம் வரும். சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் முறைப்பார்கள். ஆயினும், மற்றவர்களை அதிகம் மதிப்பார்கள். சமூகத்தில் நல்ல பெயர் பெற்றிருப்பார்கள். மூக்கின் வலது புறத்தில் மச்சம் இருப்பவர்கள் புகழ் பெற்று விளங்குவார்கள். இதுவே இடது புறத்தில் இருந்தல அவர்கள் சற்று பதட்டத்துடன், சௌகரியங்கள் குறைந்தும் காணப்படுவார்கள்.

இதழ்கள்!
மேல் இதழில் மச்சம் இருந்தால், அவர்கள் காதலில் சிறந்து விளங்குவார்கள். ஆடம்பர வாழ்க்கை அமைய வாய்ப்புகள் உண்டு. சுய கருத்தை, குரலை உலகம் கேட்கும்படி ஈடுபடுவார்கள். கீழ் உதட்டில் மச்சம் இருந்தால், அவர்கள் கிரியேட்டிவ் நபராக இருப்பார். இந்த பெண்கள் அவர்களது திறமையை உலகறிய பாடுபடுவார்கள். கலை சார்ந்த விஷயங்களில் சிறந்து விளங்குவார்கள்.

கன்னம்!
வலது புற கன்னத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் தங்கள் குடும்பத்தை விரும்புவார்கள், வயதில் மூத்தவர்களை மதித்து செயல்படுவார்கள். வீட்டு பறவையாக இருப்பார்கள். குடுமபத்துடன் தான் அதிக நேரம் செலவிடுவார்கள். இடது புற கன்னத்தில் மச்சம் இருந்தால், அந்த பெண்கள் சற்று கர்வத்துடன் காணப்படுவார்கள். தனக்கான இடத்தில் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். அதில் யாரும் தலையிட விரும்பமாட்டார்கள்.

கழுத்து!
பின் கழுத்தில் மச்சம் இருக்கும் பெண்கள் ஆக்ரோஷமாக இருப்பார்கள். தங்கள் கனவு மெய்ப்பட வேண்டும் என்றால் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். முன் கழுத்தில் மச்சம் இருக்கும் பெண்கள் நன்கு பாடும் திறன் பெற்றிருப்பார்கள். கலை ஆர்வம் இருக்கும். இவர்கள் சிறந்த தாய், மகள், மனைவியாக விளங்குவார்கள்.

தோள்!
வலது புற தோளில் மச்சம் இருக்கும் பெண்கள் ஸ்மார்ட்டாக, தைரியாமாக இருப்பார்கள். இடது புற தோளில் மச்சம் இருக்கும் பெண்கள் தேவையற்ற சண்டைகளில் மூக்கை நுழைக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.

மார்பு!
வலது மார்பில் மச்சம் இருக்கும் பெண்கள் நிறைய பொருளாதார நெருக்கடியை சந்திப்பார்கள். கடவுள் நம்பிக்கை இருக்கும். பிரச்சனைகளை எதிர்த்து போராடும் குணாதிசயம் கொண்டிருப்பார்கள்.

Related posts

சர்க்கரை நோயால் வீக்கம் அடையும் கால்களுக்கான அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களின் வலி பேசும் 28 வயது பெண்ணின் பீரியட்ஸ் ஓவியம்!

nathan

பெண்களுக்கு 10 முதல் 60 வயதிற்கு மேல் வரும் பிரச்சனைகளும் – தீர்வும்

nathan

ஒட்டுமொத்த வியாதிக்கும் தீர்வு! மிக விரைவில் தொப்பையைக் குறைக்கும் முருங்கைக் கீரை சூப்…

nathan

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கனுமா?

nathan

நீங்கள் தூக்கத்தில் பேசுவதற்கான காரணங்களும், தடுக்கும் முறைகளும்

nathan

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

nathan

பித்தவெடிப்பு குணமாக:

nathan

தெரிஞ்சிக்கங்க…வயிற்றில் குழந்தை எப்போது உதைக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan