28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
biriyani.jpg
அசைவ வகைகள்

தேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

சீரக சம்பா அரிசி – அரை கிலோ
சிக்கன் – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 300 கிராம்
இஞ்சி – பூண்டு விழுது – 2 ஸ்பூன்
கிராம்பு – 4
ஏலக்காய்- 3
முந்திரி – 10
எலுமிச்சம் பழம் – 1
பச்சை மிளகாய் – 10
தயிர் – 1 கப்
தேங்காய் பால் – 1 கப்
புதினா – 1 கட்டு
கொத்தமல்லி – 1 கட்டு
நெய் – 4 கரண்டி
எண்ணெய் – 2 கரண்டி
கேசரி பவுடர்- 1 தேக்கரண்டி
கசகசா – 2 தேக்கரண்டி
பட்டை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும்.

பிரியாணி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் பட்டை, கிராம்பு சேர்த்து, அரிசியை உதிரியாக வேக வைத்து வடித்து வைக்கவும்.

மீதம் இருக்கும் பட்டை, கிராம்பை இஞ்சி – பூண்டு விழுதுடன் அரைக்கவும்.

பெரிய வெங்காயம், மிளகாய், முந்திரியை தனியாக அரைக்கவும்.

கொத்தமல்லி இலை, புதினா, சேர்த்து தனியாக அரைக்கவும்.

அடி கனமான பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த வெங்காய மசாலாவை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பச்சை வாசனை போனவுடன் அரைத்த கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் நன்றாக வதங்கிய பின், இதனுடன் தயிர், கழுவி சுத்தம் செய்த கோழிக்கறியை போட்டு, எழுமிச்சம் பழச்சாறு சேர்த்து வதக்கவும்.

எல்லாம் நன்றாக வதக்கியவுடன் தேங்காய் பால், கேசரி பவுடர், உப்பு சேர்த்து கிளறி மூடவும்.

சிக்கன் வெந்து, மசாலா சுருண்டு வந்ததும், வடித்து வைத்துள்ள சாதம் சேர்த்து கிளறி, அரை மணி நேரம் மிதமான தீயில் வைத்து இறக்கினால் சுவையான தேங்காய் பால் சிக்கன் பிரியாணி தயார்.biriyani.jpg

Related posts

சூப்பரான கீரை வித் சீஸ் முட்டை ஆம்லெட்

nathan

சீரக மீன் குழம்பு

nathan

அசத்தும் சுவையுடன் மட்டன் புலாவ்

nathan

சுவையான செட்டிநாடு சைவ மீன் குழம்பு

nathan

தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு

nathan

ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா

nathan

கொத்து பரோட்டா

nathan

ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த கெளுத்தி மீன்

nathan

சூப்பர் தயிர் சிக்கன் : செய்முறைகளுடன்…!

nathan