28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
201708221334028088 Can you reduce your stomach fat in one month SECVPF
தொப்பை குறைய

வயிற்றுக் கொழுப்பை ஒரே மாதத்தில் குறைக்க முடியுமா?

வெறும் ஒரு மாதத்தில் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க முடியும். ஒரு மாதத்தில் தொப்பைக் கொழுப்பைக் கரைக்க ஒரு சிறந்த வழி உள்ளது.

வயிற்றுக் கொழுப்பை ஒரே மாதத்தில் குறைக்க முடியுமா?
வெறும் ஒரு மாதத்தில் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க முடியும். ஆனால் சிலர் தினசரி உணவு முறையை மாற்றி, தினமும் கடினமான உடற்பயிற்சி செய்து வந்தால் வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்க முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல.

உணவு முறையை மாற்றாமலும் கொழுப்பைக் குறைக்க முடியும். எனினும் ஒரு மாதத்தில் தொப்பைக் கொழுப்பைக் கரைக்க ஒரு சிறந்த வழி உள்ளது. கொழுப்பைக் குறைப்பது என்பது மிகவும் மெதுவான செயல்பாடு, எனவே வயிற்றில் ஒரு சிறிய பகுதியே குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சர்க்கரை, கொழுப்பு மற்றும் உயர்ந்த கலோரி உள்ள உணவுகளில் இருந்து தள்ளியே நில்லுங்கள். பிஸ்கட், கேக் மற்றும் சிப்ஸ் இவை அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. இவை அனைத்திலும் ஊட்டச்சத்து மிகவும் குறைந்த அளவிலும் மற்றும் கலோரி மிகவும் அதிக அளவிலும் உள்ளது.

இந்த வகையான உணவுகளை எடுத்துக் கொண்டால் கலோரிகளின் அளவு அதிகரிப்பதால், இந்த கலோரியின் அளவை அன்றாட உடற்பயிற்சியின் மூலம் குறைக்க இயலாது.

தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் நமது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் நீரின் வழியாக வெளியேறும். எனவே உடலுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி இவ்வாறு உடலுக்கு தேவையான நீர் அருந்துவதால் உடலின் வளர்ச்சிதை மாற்றங்களை ஊக்குவிக்கிறது மற்றும் உடலிற்கு புத்துணர்வையும் தருகிறது. ஏனெனில் குளிர்ந்த நீர் அதிக கலோரிகளை எரிக்கிறது.

நட்ஸ், தானியங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் இவை அனைத்திலும் நார்ச்சத்து நிறைந்து உள்ளது. இவை அனைத்தையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை சாப்பிடுவதால் பசி உணர்வு ஏற்படாது. ஏனெனில் இவை ஜீரணம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.

ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது உடலுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஓடுதல், நடனம், நீச்சல் போன்ற உடற்பயிற்சியாக இருக்கலாம் (அ) ஜிம் பயிற்சிகளாக இருக்கலாம். இவ்வாறு சென்று பயிற்சிகளை மேற்கொண்டு இதயத்தின் வேலையை வேகப்படுத்த வேண்டும்.

வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயல் என்பதை மனதில் கொள்ளுங்கள். எனவே குறிக்கோளைப் பெற தொடர்ந்து ஈடுபாட்டோடு இருக்க வேண்டும்.201708221334028088 Can you reduce your stomach fat in one month SECVPF

Related posts

பெண்களுக்கு வயிற்று சதை குறைய ஏரோபிக்ஸ் பயிற்சி நல்லது

nathan

எளிதில் தொப்பையை குறைக்கும் வழிகள்!

nathan

இந்த பொருளை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டா, மூன்று மடங்கு வேகமாக தொப்பை குறையும். சூப்பர் டிப்ஸ்…

nathan

தொப்பையை வேகமாக கரைக்க வேண்டுமா? அப்ப தினமும் இத ஒரு டம்ளர் குடிங்க…

nathan

சுடுநீரில் கறுப்பு மிளகு சேர்த்து ஒரு மாசம் குடிங்க? பானை வயிறும் மாயமாய் போய்விடும்!

nathan

தொப்பையைக் குறைக்கவா..? 15 நாட்களில் சிறந்த வழி.

nathan

கீழ் வயிற்று தசைப்பகுதியை குறைக்கும் பயிற்சி

nathan

பானைப் போன்ற தொப்பை இந்த நோய்களை உண்டாக்கும்

nathan

சூப்பர் டிப்ஸ்,!தொப்பையைக் குறைக்க இதை ஒரு கப் சாப்பிட்டால் போதும்.!

nathan