24.8 C
Chennai
Monday, Dec 23, 2024
201708171128438902 1 feet. L styvpf
அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

மழைக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?

மழைக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?

மழைக்காலத்தில் ஒரு சில சரும பிரச்னைகள் வந்துவிடும். அதில் முக்கியமானது சேற்றுப்புண். ஈரத்தினால் ஏற்படும் பூஞ்சை பாக்டீரியாக்களால் இவை உருவாகும். இப்பிரச்சனை மட்டுமின்றி வேறு சில பிரச்சனைகளும் வராமலிருக்க பாதத்தை முழுமையாக பராமரிக்க வேண்டும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சின்ன சின்ன வழிமுறைகள் தான். பூஞ்சைத் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க, உங்கள் பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். ஒவ்வொரு முறை வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியதும், கால்களை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவவும். பிறகு, கால்களை ஈரம் போக நன்றாக துடைக்கவும்.

201708171128438902 1 feet. L styvpf

கால் நகங்களை வெட்டுங்கள். கால் நகங்களில் எப்போதும் அழுக்கு சேர்வது இயல்பு தான். ஆனால் மழை நீரில் நடக்கும் போது, அந்த அழுக்கே பூஞ்சைத் தொற்றாக மாற வாய்ப்புண்டு. எனவே கால் நகங்களை வெட்டி விடவும். சரியான காலணிகளை அணியுங்கள் ஷூக்கள் போட்டு மழை நீரில் நடக்கும் போது ஷூக்களுக்குள் நீர் இறங்கி நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மழைக் காலத்தில் கேன்வாஸ் ஷூக்கள் போடுவதைத் தவிருங்கள்.

உங்கள் கால்களுக்கு பெடிக்யூர் செய்வது இந்த மழைக் காலத்தில் ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். காலணிகளை சுத்தம் செய்யுங்கள். கால்களை சுத்தமாக வைத்திருப்பது போல, நம் காலணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதும் மிகவும் அவசியம். வீடு திரும்பி, கால்களைக் கழுவிய கையோடு, காலணிகளையும் கழுவி நன்றாக உலர வைக்கவும்.

Related posts

முக பருவை போக்க..,

nathan

Dry Brushing. பிரபலமாகும் அழகு சிகிச்சை

nathan

முக அழகை பாதிக்கும் வியாதிகள் பற்றி தெரியுமா? கட்டாயம் இத படிங்க!…

sangika

எளிய தீர்வு.. கண்ணைச் சுற்றி பை போன்று இருக்கும் சதையை போக்கும் வழிமுறைகள்..!

nathan

சீனா எப்போது எப்படி கொ ரோ னாவை பரப்பியது தெரியுமா? வெளிப்படையாக போட்டு உடைத்த சீன நாட்டவர்!

nathan

பவுடர் போட போறீங்களா

nathan

இளவரசர் ஹரியின் உண்மையான தந்தை யார்?தோழி கூறும் தகவல்

nathan

குழந்தைகளின் தவறை புரிய வையுங்கள் அடிக்கவோ திட்டவோ வேண்டாம்

nathan

யுவன் ஷங்கர் ராஜாவா இது.. மனைவி வெளியிட்ட போட்டோ

nathan