மாதவிலக்கு கோளாறுதான் குழந்தை பேறு தள்ளி போக காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்திய முறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?
இப்ப எல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் காரணமா இருக்கு! மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிக்கறதுல சிக்கல் வரும். மாதவிலக்கு கோளாறுதான் காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்தியமுறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
அரை லிட்டர் பசும்பால்ல, கால் கிலோ மலைப் பூண்டை உரிச்சுப் போட்டு வேக வையுங்க. கலவை நல்லா சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு கற்கண்டு… இல்லேன்னா, பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்குங்க. மாதவிலக்கான நாட்களிலிருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டு வந்தா, கண்டிப்பா பலன் கிடைக்கும்.
இன்னொரு வைத்தியமும் இருக்கு! பசும் மஞ்சளை அரைச்சு எடுத்த சாறு, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய்… இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து கலந்து வெச்சுக்குங்க. இதை சூடு பண்ணத் தேவையில்லை. மாதவிலக்கான முதல் மூணு நாட்களில் காலை, சாயந்திரம்னு ரெண்டு வேளையும் தலா ரெண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடணும். எனக்குத் தெரிஞ்சு நிறைய பெண்களுக்கு இந்த மருத்துவத்தை சிபாரிசு பண்ணி, பலன் கிடைச்சிருக்கு.
உடம்புல ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாவதில் பிரச்சனை வரும். தினம் அஞ்சுலருந்து பத்து எண்ணிக்கை வரை சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையா சாப்பிட்டா, கொஞ்ச நாட்களிலேயே ஊளைச் சதை குறைஞ்சு ஆளும் ஸ்லிம்மாகிடுவாங்க. சீக்கிரமே வீட்டுல ‘குவா குவா’ சத்தமும் கேட்கும்.