27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
p62c
மருத்துவ குறிப்பு

ஜிகா வைரஸ் – மிரள வேண்டாம். மீளலாம்!

அங்கு தொட்டு, இங்கு தொட்டு கடைசியாக நம் வீடு வரைக்கும் வந்துவிட்டது ஜிகா வைரஸ். ஒரு பக்கம் டெங்கு மிரட்ட, இன்னொரு பக்கம் ஜிகா மிரட்டுகிறது.
ஜிகா வைரஸ் 1947-ல் உகாண்டாவில் உள்ள ஜிகா காட்டில் ஒரு குரங்கிடமிருந்து அடையாளம் காணப்பட்டது. ஜிகா காட்டில் கண்டறியப் பட்டதால்தான் இந்த வைரஸுக்கு இந்தப் பெயர். 1968-ல்


ஜிகா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான மனிதர் நைஜீரியாவில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்டார். ஜிகா வைரஸை அழிக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. தடுப்பு மருந்துகளும் இல்லை. அதனால் உலகமே ஜிகாவைப் பார்த்துப் பதறிக் கொண்டிருக்கிறது.

ஜிகா இந்தியாவுக்கெல்லாம் வராது என்று மத்திய அரசு சொல்லிக் கொண்டிருந்த வேளையில், குஜராத்தில் 3 பேர் ஜிகா வைரஸ் பாதிப்போடு கண்டுபிடிக்கப்பட்டார்கள். அந்தச் செய்தியை ஜீரணிக்கும் முன்பாக, கிருஷ்ணகிரியில் ஓர் இளைஞர் ஜிகா பாதிப்போடு மருத்துவ மனைக்கு வந்திருக்கிறார்.
இப்போது சிக்கன் குன்யா, டெங்குவோடு சேர்த்து ஜிகா பீதியும் தமிழகத்தைப் பீடிக்கத் தொடங்கியிருக்கிறது.
ஜிகா வைரஸ் எப்படிப் பரவுகிறது? எப்படித் தடுக்கலாம்? பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

அறிகுறிகள்
கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சிவந்த தடிப்புகள், சிவந்த கண்கள்.

ஜிகா வைரஸ் எப்படிப் பரவும்?
ஏடிஸ் (Aedes) என்ற கொசு கடிப்பதால் இந்த வைரஸ் பரவும். டெங்குக் காய்ச்சலையும் இந்த வகையான கொசுதான் உருவாக்குகிறது. இந்தக் கொசு, நன்னீரில் வாழும். கிட்டத்தட்ட டெங்கு வைரஸ் தாக்கத்துக்கு இணையாக இருக்கும். இந்த வகைக் கொசுக்கள், நம் உடலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சும்போது, வைரஸை உள்ளே செலுத்திவிடும்.
* ஜிகா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரை கடித்த கொசு மற்றவரைக் கடிப்பதால் பரவும்.
* ஏடிஸ் கொசு மூன்று வாரங்கள் மட்டுமே உயிர்வாழும். அந்தக் குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான முட்டைகள் இட்டு இனப்பெருக்கம் செய்யும். முட்டையிலிருந்து லார்வா, பியூப்பா என உருமாறிப் பத்து நாள்களில் கொசுவாக மாறும்.
* நல்ல நீரில் முட்டையிட்டுப் பரப்பும். பகல் நேரங்களிலும் இந்த வகைக் கொசு கடிக்கும்.
* கர்ப்பிணிகள் ஜிகா வைரஸால் பாதிக்கப் பட்டிருந்தால், பிறக்கும் குழந்தையின் தலை சிறிதாக இருக்கும். குழந்தையின் மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும்.
கவனம் தேவை
எந்தக் காய்ச்சலையும் சாதாரணமாக விட்டுவிடக்கூடாது. சாதாரண தலைவலி, காய்ச்சல், சளி என்று விட்டுவிட்டால், அது நோய்க் கிருமிகளின் தாக்குதல் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். உடனடியாக மருத்துவரைப் பார்த்துச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். உரிய பரிசோதனை களை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரின் பரிந்துரை இல்லாது எந்தவிதமான ஊசியோ, மாத்திரையோ எடுத்துக்கொள்ளக் கூடாது.

சிகிச்சை
* முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் தீர்வு.
* உணவுக் கட்டுப்பாடு அவசியம். மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உரிய நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.
* நீர் ஆகாரங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* வீட்டில் உள்ள தண்ணீர்த் தொட்டிகளை மூடிவைக்க வேண்டும். வாரம் ஒருமுறை தொட்டிகளை நன்கு கழுவ வேண்டும்.
* தேவையற்ற பொருள்களில் தண்ணீரைத் தேக்கி வைக்கக் கூடாது.
* கொசு உற்பத்தியாகும்படியான சூழலை மாற்றுங்கள். சிரட்டை, டயர், உரல், வீட்டின் வெளியே உள்ள பள்ளம், வீட்டின் உள்ளே உள்ள பிரிட்ஜ் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

* நம் வீட்டை மட்டுமல்லாது நம்மைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களையும் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை
* ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
* கொசு வலை, உடலை முழுவதும் மூடும் படியான ஆடைகள் அணிந்துகொள்வது, கொசுக் கடியில் இருந்து தப்பிக்க க்ரீம் மற்றும் லோஷன் பயன்படுத்துவது போன்றவற்றின் மூலம் கொசு கடிக்காதவண்ணம் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
* ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்று வருபவர்கள் முதலில் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. கர்ப்பிணிகள் உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்வது கருவில் இருக்கும் குழந்தையின் நலன் காக்க உதவும்.

ஏடிஸ் கொசு சிக்கன் குன்யா, யெல்லொ ஃபீவர் (Yellow Fever), டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் போன்றவற்றைப் பரப்பும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஜிகா வைரஸுக்கு நம்மைச் சுற்றி உள்ள சூழலைச் சுத்தமாக வைத்திருப்பதுதான் சிறந்த தடுப்பு மருந்து. மேலும், ஜிகா வைரஸ் குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க 104 என்ற உதவி எண்ணுக்கு அழைக்கலாம். இந்தச் சேவை 24 மணி நேரமும் உள்ளது. இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட விழிப்பு உணர்வு அளிக்கப்படும்.p62c

Related posts

சூப்பர் டிப்ஸ்! உடல்எடை, தொப்பையால் அவதிப்படுகிறீர்களா? வெறும் 10 நாட்கள் இந்த பானத்தை குடிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்மையை அதிகரிக்கும் அம்மான் பச்சரிசி இலை.

nathan

நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஆவாரை! சூப்பர் டிப்ஸ்..

nathan

கசக்கும் இல்லறம் – இனிக்கும் கள்ள உறவு

nathan

மூல நோயிலிருந்து முற்றிலும் குணம் தரும் கருணைக்கிழங்கு

nathan

குழந்தைகளுக்கு சமூக வலைத்தளங்களில் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க… உயிர் போகும் காது வலியா? இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்….

nathan

இதில் ஒரு பிரச்சினை இருந்தாலும் உங்கள் சிறுநீரகம் பெரிய ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்…தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…வரும் முன் காத்து, கண்களை பாதுகாப்போம்

nathan