11
மருத்துவ குறிப்பு

உங்கள் துணைவி எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள இதை படியுங்கள்!

ஒருவருக்கு காதல் ஒருமுறை தான் பூக்கும் என்பதெல்லாம் வெறும் பொய். சிலருக்கு காதல் பலமுறை பூக்கும். ஆனால் பலரும் அதை வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில்லை.
கைரேகை ஜோதிடத்தின் படி, பலமுறை காதல் மலர்ந்தவர்களை எளிதில் கண்டறிய முடியும்.
நம் கையில் உள்ள சில ரேகைகள் ஒருவரது மோகத்தன்மை அல்லது கடலைப்போடும் குணத்தை வெளிக்காட்டும். கைரேகை ஜோதிடர்கள், ஒருவரது கை ரேகைகளைப் பார்த்தே இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கணித்துக் கூறுவார்கள்.
இப்படி கூறுகையில், சிலருக்கு நடக்காமல் இருந்தாலும், பலருக்கும் நடந்திருக்கும். இக்கட்டுரையில் கை ரேகைகளைக் கொண்டு ஒருவரது மோகத்தன்மையை எப்படி அறிவது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் துணை எப்பேற்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
11
அறிகுறி 1
ஒருவரது கையில் உள்ள சுக்கிர மேட்டில் வலைப்பின்னல் போன்று அளவுக்கு அதிகமான ரேகைகள் இருந்தால், அத்தகையவர்கள் மற்றவர்களுடன் அளவுக்கு அதிகமாக கடலைப் போடக்கூடியவர்கள். அதாவது அத்தகையவர்களிடம் மோகத்தன்மை சற்று அதிகம் இருக்குமாம்.
கையில் உள்ள சுக்கிர மேட்டில் மச்சம் இருந்தால், அத்தகையவர்கள் தன் காதல் வாழ்க்கையை வெளிப்படையாக சொல்லாமல் மறைப்பார்களாம்.
12 1
அறிகுறி 2
இரண்டு கைகளிலும் உள்ள இதய ரேகைகள் செயின் போன்று பிணைந்திருந்தால், அவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் அத்தகையவர்களுக்கு நிறைய காதல் இருக்க வாய்ப்புள்ளதாம்.
13 1
அறிகுறி 3
சுண்டு விரலின் அடிப்பகுதிக்கும், இதய ரேகைக்கும் இடையே ஒன்றிற்கு மேற்பட்ட கோடுகள் இருந்தால், அத்தகையவர்களுக்கும் நிறைய காதல் மலர்ந்திருக்க வாய்ப்புள்ளதாம்.
15 1
அறிகுறி 4
சந்திர மேட்டில் இருந்து இரண்டு தலைவிதி ரேகைகள் ஆரம்பமானால், அத்தகையவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு உறவுகளை பிரச்சனைகளின்றி சமாளிக்கக்கூடியவர்களாம்.
16
அறிகுறி 5
சுண்டு விரலுக்கு கீழே மற்றும் இதய ரேகைக்கு மேலே நான்கு நீளமான மற்றும் மெல்லிய திருமண ரேகைகள் இருந்தால், அத்தகையவர்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்களாக இருப்பார்களாம்.

Related posts

காது குடைந்து கொண்டே இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்

nathan

கால்சியம் சத்து பெருக என்ன வழி?

nathan

அதிகாலைச் சூரியனை இப்படியும் ‘வெல்கம்’ பண்ணலாம் பெண்களே!

nathan

மூலநோய் வராமல் தடுப்பது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா?

nathan

மார்பக அளவைப் பெரிதாக்கும் சில சமையலறை மூலிகைப் பொருட்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்க ஓடுனா மட்டும் போதாது!

nathan

உங்களுக்கு தெரியுமா உடலுக்கு தீங்கை விளைவிக்கும் வைட்டமின்கள்!!!

nathan

உண்மையான காதலுக்கு தேவை புரிதல் தான்! உடலும் அழகும் இல்லை..!

nathan