22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
21 1500624353 1
மருத்துவ குறிப்பு

இந்த 5 வகையான பெண்களில் உங்களுக்கு பிடிச்ச நபர் யார்?

ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் தான் இருக்குமா மச்சி? இல்லவே இல்லை. எல்லாரிடமும் எல்லா ஃபீலிங்கும் இருக்கும். ஆனால், அந்தந்த சூழலில் அவர் எந்தெந்த ஃபீலிங்கை அதிகமாக வெளிப்படுத்துகிறாரோ, அதை வைத்து நாம் அவர் நல்லவர், கெட்டவர் என வகை பிரிக்கிறோம். அந்த வகையில், பெண்களில் இருக்கும் ஐந்து வகைகள், அவர்கள் குணாதிசயங்கள், பண்புகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். அவர்களில் எந்த வகையான பெண்களை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள், வெறுக்கிறீர்கள் என்பதை நீங்கள் எங்களிடம் கமெண்டுகளில் கூறுங்கள்.
21 1500624353 1
கூல்!
முகம் பார்க்கும் கண்ணாடி போல மனதில் பட்டதை முகத்திற்கு நேரே கூறிவிட்டு நகரும் நபர்கள். இவர்களிடம் ஒரு முதிர்ச்சி இருக்கும். எதையும் எளிதாக எடுத்துக்கொள்வார்கள். தலையில் கனத்தை ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். ஒரு செயலில் நிதானமாக இருப்பார்கள். பேசி சண்டையை பெரிதுப் படுத்துவதற்கு பதிலாக. அங்கே இருந்து அமைதியாக விலகி சென்றுவிடுவார்கள்.
21 1500624362 2
ட்ரூ. ட்ரூ. ட்ரூ.
அடிப்படையில் நல்லவர்களாக இருப்பினும், இவர்கள் சொல் புத்திக் காரர்கள். யார் என்ன கூறினாலும், அதை அப்படியே நம்பி ஆமாம் சாமி போடும் நபர்கள். இவர்களுக்கு எதுவும் பெரிதாக தெரியாவிட்டாலும், அதை தான் முழுதாக அறிந்தது போல நடந்துக் கொள்வார்கள். இவர்களால் எந்த பிரச்சனையும் வராது என்றாலும், இவர்கள் போடும் “ஆமாம் சாமி” மற்றவர்களுக்கு வலு சேர்க்கலாம்.
21 1500624371 3
விஷம்!
தன்னை பற்றி ஒருவர் விமர்சனம் செய்தால் அதை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. உடனே அவர்களுக்கு எதிராகவும், அவர்கள் தீயவர்கள், விஷம் என பரப்புரை பேச ஆரம்பித்துவிடுவார்கள். இவர்களை அருகில் வைத்துக் கொள்வதே தீங்கு விளைவிக்கலாம். கொஞ்சம் ட்ரிகர் செய்தாலும் 10,000 வாளா பட்டாசு போல வெடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
21 1500624380 4
பிரேக் ஹர் ஃபேஸ்!
தன்னை பலசாலி என நினைத்துக் கொண்டிருக்கும் பயந்தாங்கொள்ளிகள். நான் எல்லாம் யாரு தெரியுமா? வெளிய வந்து பார்க்க சொல்லு, என் ஏரியாவுக்கு வா நீ என சவடால் விடும் இவர்கள், உண்மையில் அவ்வளவு வர்த் கிடையாது. தான் ஒரு மாஸ் என்ற பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து வரும் அப்பிராணி ஜீவன்கள் இவர்கள்.
21 1500624390 5
அக்கா.
முகத்திற்கு நேராக ஒரு மாதிரியும், முதுகுக்கு பின்னே வேறு மாதிரியும் பேசும் பச்சோந்தி வகையறாக்கள். அந்தந்த உறவுகளுடன் ஒட்டி உறவாட, அவர்களிடம் இருந்து ஏதேனும் காரியங்கள் நிகழ்த்திக் கொள்ள என்ன வேண்டுமானாலும் பேசும் கூழைக்கும்பிடு போடும் ஆட்கள். சிம்பிளாக வடிவேலு காமெடி வைத்து சொல்ல வேண்டுமானால், இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்.!

Related posts

பெற்ற பின் பெல்ட் அணிவது சரியா ?

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு ஏற்படும் ஒமிக்ரான் தொற்று:அறிகுறிகள் என்னென்ன?

nathan

நகசுத்தி வீட்டு வைத்தியம்

nathan

மதுவை ஒழிப்போம் வீட்டை காப்போம்

nathan

பெண்ணின் கருவளம் மிக்க நாட்களை கண்டறிவது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஈஸ்ட் வளர்ச்சி அபரீதமாக இருப்பதற்கான 10 அறிகுறிகளும்… அதனை சமாளிப்பதற்கான வழிகளும்…

nathan

உபயோகமான‌ பாட்டியின் சில‌ வீட்டு மருத்துவக் குறிப்புகள்! இய‌ற்கை வைத்தியம்!

nathan

சோயா மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்குமா?அப்ப இத படிங்க!

nathan

உங்கள் கண்களில்ஏதும் பிரச்சனைகள் உள்ளதா?அப்ப இத படிங்க!

nathan