நம்மில் பலர் ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்கின்றோம். இதுவரை அந்த சரும பிரச்சனைகளைப் போக்க உதவும் பல வழிகளையும் பார்த்திருப்போம். ஆனால் இக்கட்டுரையில் சரும வகைக்கு ஏற்ப, சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கங்கள், கருமைகளைப் போக்கும் ஃபேஸ் மாஸ்க்குகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதுவும் மருத்துவ குணம் அதிகம் நிறைந்த மஞ்சளைக் கொண்டு எப்படி சரும பிரச்சனைகளைப் போக்குவது என்று பார்க்கப் போகிறோம். சரி, இப்போது சரும பிரச்சனைகளைப் போக்க மஞ்சளை எந்த சருமத்தினர் எந்த மாதிரி பயன்படுத்துவது என்று காண்போம்.
நார்மல், காம்பினேஷன் அல்லது அதிக கருமையான சருமத்தினருக்கு. தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தயிர் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – சில துளிகள்
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து, முகம், கை, கால்களில் தடவி 30 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும்.
எண்ணெய் பசை மற்றும் முகப்பரு சருமத்தினருக்கு.
தேவையான பொருட்கள்:
தேன் – 1/2 டீஸ்பூன்
கற்றாழை ஜெல் – சிறிது
தயிர் – 1 டீஸ்பூன்
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வறட்சியான சருமத்தினருக்கு.
தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
தயிர் – 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
இந்த 3 பொருட்களையும் ஒன்றாக கலந்து, சருமத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
சீழ் நிறைந்த பருக்களைப் போக்க.
ஆப்பிள் சீடர் வினிகருடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது தடவி, 1 மணிநேரம் கழித்துக் கழுவ வேண்டும்.
இந்த முறையை இரவில் படுக்கும் முன் செய்தால் இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்.
குறிப்பு
மஞ்சளை சருமத்திற்கு பயன்படுத்திய பின் வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஆகவே மஞ்சள் கலந்த ஃபேஸ் மாஸ்க்கை இரவு நேரத்தில் பயன்படுத்துவதே சிறந்தது.
Related posts
Click to comment