29.2 C
Chennai
Wednesday, Jan 15, 2025
sl526695
சிற்றுண்டி வகைகள்

ரெட் ரைஸ் வெஜ் மிக்ஸ்

என்னென்ன தேவை?

சிவப்பு அரிசி – 200 கிராம்,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
கேரட் – 1,
காலிஃப்ளவர் – 50 கிராம்,
பீன்ஸ் – 50 கிராம்,
ஃப்ரெஷ் பட்டாணி – 50 கிராம்,
உப்பு – தேவைக்கு,
பெரிய வெங்காயம் – 1,
மிளகுத்தூள் – தேவைக்கு,
பெங்களூர் தக்காளி – 1,
இஞ்சி, பூண்டு விழுது – சிறிது,
புதினா – சிறிது.

எப்படிச் செய்வது?

காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிவப்பு அரிசியை கழுவி ஊறவைத்து கொள்ளவும். குக்கரில் ஊறிய சிவப்பு அரிசி, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து உதிரி உதிரி யாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து இஞ்சி, பூண்டு விழுதை போட்டு பச்சைவாசனை போக வதக்கி, வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். பின் மிளகுத்தூள், புதினா இலையை சேர்த்து பிரட்டி இறக்கவும். சிவப்பு அரிசி சாதத்துடன் காய்கறி கலவையை கொட்டி கலந்து சூடாக பரிமாறவும்.

குறிப்பு: சிவப்பு அரிசியை வேகவைக்கும் போது 1:3 (அரிசி: தண்ணீர்) என்று இருக்க வேண்டும். sl526695

Related posts

குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் – சீஸ் பாஸ்தா

nathan

மஷ்ரூம் கட்லட்

nathan

முந்திரி முறுக்கு: தீபாவளி ஸ்பெஷல்

nathan

ஸ்வீட் பிரெட் டோஸ்ட்

nathan

தால் கார சோமாஸி

nathan

லசாக்னே

nathan

இஞ்சித் தொக்கு

nathan

கேழ்வரகு ஸ்டப்டு இட்லி

nathan

சிவப்பு அவல் புட்டு

nathan