25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Suicide
மருத்துவ குறிப்பு

தற்கொலைகள்

பெறுமதிமிக்க உயிரின் தாற்பரியம் பூச்சிகொல்லிகளால் கரைந்து கொண்டு அலரிக்கொட்டைகளில் அழிந்து கொண்டும் இருக்கிறது. இத்தனை காலமும் தமிழ் மக்களின் உயிரிழப்புகள் பலவரலாறுகளை ஏற்படுத்தியிருக்க இப்படியாக அவலச்சாவுகள் மக்கள் மனதில் வெறுமையை ஏற்படுத்தியுள்ளன.

நம்மில் ஒரு தடவையேனும் தற்கொலை எண்ணம் தோன்றி மறையாதவர்கள் எத்தனைபேர்? விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான். ஏன் அவ்வாறான எண்ணம் தோன்றியவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை? அது ஒரு கணநேர மனநிலைத்தடுமாற்றம். சில கேள்விகளுக்கு அவர்கள் விடைதேடிக் கொள்
கிறார்கள். மறுகணம் தமது முடிவைமாற்றிக் கொள்கிறார்கள்.

  • நான் இறப்பதால் கிடைக்கும் பலன் என்ன?
  • நான் இறந்துவிடின் துன்பப்படுபவர்கள் எத்தனைபேர்?
  • ஒரு சிறு நன்மையாவது என்னால் இந்த உலகத்துக்கு உள்ளதா?
  • நான் இறப்பின் மனத்தால் சித்திரவதைப்படுபவர்கள் உள்ளார்களா? உதாரணமாக ஒருவர் நான்
  • இதைச் செய்திருந்தால் இவர் இறந்திருக்கமாட்டாரா? என்று எண்ணித் துன்புறப் போவதுயார்?

  • எனது இக்கட்டான இம்மனநிலைக் குழப்பத்துக்கு வேறு மாற்றுவழியுள்ளதா?
  • வாழ்வில் ஒருதடவையேனும் நான் மற்றவர்களால் பாராட்டப்பட்டு உள்ளேனா?
  •  என்னைவிட மிகச்சிக்கலில் உள்ளவர்கள் இருக்கிறார்களா?
  • ஆன்மீகப் பற்றுள்ளவராயின் இறந்தபின் என் ஆவிக்கு கொடுமையான மறுபிறப்பு கிடைத்துவிடுமா?
  • தவறுதலாக உயிர்பிழைப்பின் என் கௌரவம் என்ன ஆகிவிடும்?

ஏனோ ஒருசிலர் இவ்வாறான கேள்விகளைச் சந்திக்க முதலே முடிவெடுத்துவிடுகிறார்கள் அல்லது கேட்டுக் கேட்டு விடைதெரியாமல் வேறுவழியற்று மரணத்தைத் தழுவிக் கொள்கிறார்களா?

இப்படியாக இறப்பவர்களில் பலர் மனதளவில் மிகவும் துன்புற்றவராகவே தனது பிரச்சினைகளைக் கலந்து ஆலோசிக்க தகுந்தநபர் கிடைக்காமலே இருந்திருக்கலாம்.

அடுத்து எமது இளைய தலைமுறையினரின் தற்கொலை முயற்சிக்குப் பொதுவான காரணங்கள் தான் நம்பமுடியாமல் உள்ளன.

  • மோட்டார் சைக்கிள் வாங்குவதற்குப் பெற்றோர் கடன் எடுத்துத் தரமுடி யாமை.
  • காதலனோ, கணவரோ, மனைவியோ கையடக்கத் தொலைபேசி அழைப்புக்குபதிலளிக்காமை.
  • தொலைக் காட்சி பார்ப்பதையோ, வேறு கேளிக்கைகளையோ குறைக்குமாறு கண்டிக்கப்படுகின்றமை.

ஏன் இப்படியான நிலைமை ஏற்படுகின்றது. பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான மனநெருக்கம் குறைவடைந்தமை தான் காரணம், வேறுவேறு காரணிகளால் ஒருவரையொருவர் அறிந்தும் புரிந்தும் கொள்ள
நேரப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலை.

எனவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை யாரும் தாழ்வாகவோ, வெறுப்பாகவோ நோக்குகின்ற தன்மை இயலுமான வரை குறைக்கப்பட வேண்டும். உடலில் ஏற்படும் நோய் போல அவருக்கு மனதளவில் தற்காலிகமாக ஏற்படும் ஓர் இயலாத் தன்மைதான் இதற்குக்காரணம்.

தற்கொலை எண்ணம் ஏற்பட்டு வலுப்படுகையில் அந்தநபர் தன்னையேகேள்விகேட்டு மனநிலையைச் சீராக்கலாம். புரிந்துணர்வு உடைய ஒருவருடன் உரையாடித் தெளிவடையவேண்டும். வன்னியில் இடம் பெயர்ந்த எம்மக்கள் இத்தனை இழப்பின் பின்பும் தமது நிலையைக் கட்டி எழுப்புகின்ற மனவலிமையுடையவர்களாக இருக்கின்ற போது அதே இளம் சமுதாயம் ஏன் இப்படி வழிமாறிக் கொண்டு இருக்கிறது. விடையை அவரவரே தேடிக் கொள்வோம்.

பாகவோ நோக்குகின்ற தன்மை இயலுமானவரை குறைக்கப்பட வேண்டும். உடலில் ஏற்படும் நோய் போல அவருக்கு மனதள வில் தற்காலிகமாக ஏற்படும் ஓர் இயலாத்தன்மைதான் இதற்குக்காரணம்.

தற்கொலைஎண்ணம் ஏற்பட்டு வலுப்படுகையில் அந்தநபர் தன்னையேகேள்விகேட்டு மனநிலையைச் சீராக்கலாம். புரிந்துணர்வு உடைய ஒருவருடன் உரையாடித் தெளிவடையவேண்டும்.

வன்னியில் இடம் பெயர்ந்த எம்மக்கள் இத்தனை இழப்பின் பின்பும் தமது நிலையைக் கட்டி எழுப்புகின்ற மன வலிமையுடையவர்களாக இருக்கின்றபோது அதே இளம் சமுதாயம் ஏன் இப்படி வழிமாறிக் கொண்டு இருக்கிறது. விடையை அவரவரே தேடிக் கொள்வோம்.Suicide

Related posts

மருத்துவர் கூறும் தகவல்கள்! உயிரை பறிக்கும் நிமோனியா!… கண்டறிவது எப்படி?

nathan

எண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் அதிகம் பகிருங்கள்

nathan

குழந்தைகளின் ஆஸ்துமா பாதிப்புகளைக் கண்டறிவது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருப்பை நீர்கட்டியால் ஏற்படும் வலியை குணப்படுத்த சூப்பர் டிப்ஸ்..!

nathan

அதிமதுரம் கஷாயம் குடிப்பதன் நன்மைகள்!

nathan

குழந்தைக்கு ஒருநாளைக்கு அதிகபட்சம் எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்கலாம்?

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்களது ரத்த பிரிவு என்ன?… உடல் எடையைக் குறைக்க இந்த மாதிரியான உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க

nathan

நிபுணரின் அட்வைஸ் பயப்படாதீங்க ராய்டு குறைபாடு…

nathan

நீங்கள் உடைத்தெறிய வேண்டிய 13 கெட்ட பழக்கங்கள்!

nathan