பூண்டில் மருத்துவக் குணங்கள் அதிகமாக நிறைந்துள்ளதால், வெறும் வயிற்றில் சாப்பிடும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.
பூண்டில் விட்டமின் B6, C, கனிமங்கள், மாங்கனீசு, ஆன்டி-பயாடிக் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
எனினும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திவிடுகிறது.
பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், நமது உடலில் உள்ள நச்சுக்கள், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற அனைத்தையும் வெளியேற்றி, வயிற்றில் இருக்கும் புழுக்களையும் அழித்து விடுகிறது.
நமது சருமத்தில், பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்களை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் பெரிதும் உதவுகிறது.
பூண்டை நாம் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அது நமது ரத்த நாளங்களை கட்டுப்படுத்தி, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
பூண்டில் அழற்சி எதிர்ப்பி குணங்கள், டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் போன்ற தன்மைகள் அதிகமாக அடங்கியுள்ளது. எனவே நாம் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால், நம் உடலில் ஏற்படும் அழற்சிகளை எதிர்த்து போராடி, அலர்ஜியால் ஏற்படும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
பூண்டில் அல்லில் சல்பைடு என்ற பொருள் இருப்பதால், பூண்டு புற்றுநோய் எதிர்ப்பியாக செயல்படுகிறது. எனவே பெண்கள் தங்கள் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வதால், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
பூண்டில் ஆர்கனோசல்பர் என்னும் கலவை இருப்பதால், இவை நமது உடலில் அதிகமாக துர்நாற்றத்தை ஏற்படுத்தி, மூச்சு விடுவதில் சிரமங்கள் போன்ற சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
பூண்டு ஒருசிலரின் உடல் நிலைக்கு ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் அவர்களின் சருமத்தில், அலர்ஜி போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தி, எரிச்சல், வயிற்றுப்போக்கு, குமட்டல், மற்றும் வாய்புண் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு பூண்டு ஒரு பாதுகாப்பற்ற உணவாக உள்ளது. ஏனெனில் கர்ப்பிணி பெண்கள் பூண்டை அதிகமாக சாப்பிட்டு வந்தால், அவர்களின் பிரசவத்தின் போது, அதிகமான ரத்தப்போக்கு போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
மருத்துகள் மற்றும் மாத்திரைகளை தினமும் சாப்பிட்டு வருபவர்கள், பூண்டை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடந்துக் கொள்ள வேண்டும்.
தீக்காயம் ஏற்பட்டவர்கள் பூண்டை தங்களின் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள கூடாது. ஏனெனில் அவர்கள் பூண்டை அதிகமாக சாப்பிட்டால், உடம்பில் வீக்கம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
Related posts
Click to comment