இடுப்பு, தொடைப் பகுதிகளில் சேர்ந்துள்ள அதிகளவு கொழுப்பை குறைக்க 5 வழிமுறைகளை 30 நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால் ஸ்லிம்மான உடலமைப்பை பெறலாம்.
30 நாட்களில் தொடை கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
உணவு முறை மாற்றத்தால் இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கொழுப்புகள் அதிகமாக சேர்ந்து விடுகிறது. இது போன்ற பிரச்சனைகளை தடுக்க இந்த 5 வழிமுறைகளை 30 நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால் ஸ்லிம்மான உடலமைப்பை பெறலாம்.
* கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், சற்று குறைத்துக் கொண்டு பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுதானியங்கள் மற்றும் முட்டை, மீன், பால் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி, ரன்னிங், சைக்ளிங், ஸ்கேட்டிங் மற்றும் நீண்ட தூர நடைப்பயணம் போன்ற பயிற்சியை செய்ய வேண்டும். இவை உடல் எடையை கட்டுக்குள் கொண்டு செல்லும்.
* ஸ்குவாடிங் (Squating) எனும் பயிற்சியை வாரம் 3-4 நாட்கள் செய்ய வேண்டும் எப்படியெனில், முதலில் விரிப்பில் நேராக நின்று கொண்டு கைகளை முன்புறமாக நீட்டி, பாதி அமர்ந்த நிலையில், 10 நொடிகள் நிற்க வேண்டும்.
* லஞ்சஸ் (Lunges) எனும் பயிற்சியை 30 நாள்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். எப்படியெனில், முதலில் விரிப்பில், நேராக நின்று முட்டிபோட்டு வலது காலை முன்புறமாக மடக்கியபடி வைத்து, முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். இதே நிலையில் 30-40 விநாடிகள் நிற்க வேண்டும்.
* தினமும் நாம் 50 மாடி படிக்கட்டுகள் ஏறி, இறங்கி வர வேண்டும், இதனால் 1000 கலோரிகளைக் கரைத்து நம் உடலில் உள்ள கொழுப்பையும் எளிமையாக குறைக்கலாம்.