25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
மருத்துவ குறிப்பு

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவை தடுக்கும் வழிமுறைகள்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவை தடுக்கும் வழிமுறைகள்
கர்ப்பிணிகள் ஒவ்வொரு செயலிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் தான் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.ஏனெனில் இக்காலத்தில் கர்ப்பிணிகள் மனதளவில் அதிகமாக கஷ்டப்பட்டாலும் அது சிசுவை உடனே பாதிக்கும். அதுமட்டுமின்றி, உணவுகளில் கவனமாக இல்லாதது, சரியான நேரத்தில் மருத்துவரை அணுகாதது போன்றவைகளும் கருச்சிதைவை ஏற்படுத்தும்.மேலும் வேலை செய்யும் அலுவலகங்களில் ஏதேனும் கெமிக்கலை சுவாசிக்க நேர்ந்தாலும், அதுவும் கருவை பாதிக்கும். கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகளை பார்க்கலாம்..

• உடலின் வெப்பத்தைத் தூண்டும் உணவுகளான பச்சை பேரிச்சை, அன்னாசி, பப்பாளி மற்றும் அளவுக்கு அதிகமான குங்குமப்பூ எடுப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இதை அதிகமாக சேர்த்துக் கொள்ளும் போது கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. கர்ப்ப காலத்தில் ஜங்க் உணவுகளை தவிர்ப்பது மட்டுமின்றி, நல்ல பிரஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.

• கர்ப்ப காலத்தில் பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அதிலும் முதல் மூன்று மாத காலத்தில் கரு சரியாக கருப்பையில் சேராமல் இருப்பதால், இக்காலத்தில் பயணங்களை மேற்கொண்டால், அது எளிதில் கருச்சிதைவிற்கு வழிவகுக்கும். வேலைக்கு செல்லும் பெண்களால் பயணங்களை தவிர்க்க முடியாது தான். ஆனால் மேடு பள்ளங்களாக இருக்கும் பாதைகளில் பயணம் மேற்கொள்வதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

• இன்றைய காலத்தில் நோய்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மருத்துவரிடம் போதிய ஆலோசனை பெற்று, கர்ப்ப காலத்தில் போட வேண்டிய தடுப்பூசிகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.

• மன அழுத்தம் மற்றும் டென்சன் போன்றவை கருச்சிதைவு ஏற்படுவதை அதிகரிக்கும். ஆகவே கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் மனதில் போட்டு கஷ்டப்படுத்திக் கொள்ளக் கூடாது. அதற்கு தினமும் யோகா, தியானம் போன்றவற்றை செய்து வர வேண்டும். இரவு நேரங்களில் சற்று நடக்கவும் செய்யலாம்.

Related posts

ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன் என்று தெரியுமா?

nathan

பெற்றோர் குழந்தைகள் முன்னால் செய்யக்கூடாதவை

nathan

தெரிஞ்சிக்கங்க… வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க சில சூப்பரான கை வைத்தியங்கள்!!!

nathan

தலையில் கோர்த்துக்கொள்வதற்கான காரணம் – தீர்வு

nathan

பரிட்சையில் தோல்வியடையும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை

nathan

இது தான் செய்யவேண்டும்.! மனித உடலின் முக்கிய பாகத்தை காக்க

nathan

மது அருந்தும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள்

nathan

சர்க்கரை நோய் இருக்கா? அப்ப மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..

nathan

உங்களுக்கு தெரியுமா நல்ல உறக்கம் இல்லாவிட்டால் ஆபத்து

nathan