26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
app lashes2eyes
முகப் பராமரிப்பு

உங்கள் கண்கள் அனைவரையும் கவர வேண்டுமா..? இதை செய்யுங்கள்..!

பெண்கள் தங்களது முகத்தை தினமும் பராமரிக்க சற்று அதிகமாக செலவு செய்யத்தான் வேண்டியுள்ளது. நீங்கள் மேக்கப் போடுபவராக இருந்தால் கண்டிப்பாக மேக்கப் ரீமூவர் உபயோகப்படுத்த வேண்டியது அவசியம்.

அந்த மேக்கப் ரீமூவருக்கு தனியாக சில நூறுகள் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் வாசலின் (vaseline) என்ற ஒரே ஒரு பொருளை பலவிதமாக பயன்படுத்தலாம். வாசலினை எதற்காக எல்லாம் பயன்படுத்தலாம், எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த பகுதியில் காணலாம்.

1. மேக்கப் ரீமூவர் :

நீங்கள் மேக்கப்பை முறையாக ரிமூவ் செய்ய வேண்டியது அவசியம். ஆனால் மேக்கப் ரிமூவர் வாங்குவதற்காக நீங்கள் அதிகமாக செலவு செய்து கொண்டிருக்க முடியாது. மேக்கப் ரிமூவரை வாங்கினாலும், கண்கள் போன்ற சென்சிடிவான இடங்களில் இருக்கும் மேக்கப்பை ரிமூவ் செய்வது கடினம். இதற்கு வாசலின் உதவியாக இருக்கும். நீங்கள் வாசலினை கண்களில் உள்ள மேக்கப்பின் மீது தடவி நன்றாக மசாஜ் செய்து, ஒரு காட்டன் மூலம் சுத்தம் செய்துவிடுங்கள்.

2. வாசனை நீடிக்க :

நீங்கள் அதிகமாக செலவு செய்து ஒரு வாசனை திரவியத்தை வாங்கியிருப்பீர்கள். அதன் வாசனை நீண்ட நேரம் நீடிக்க வேண்டுமென கருதினால், உங்களது மணிக்கட்டுகளில் சிறிது வாசலினை தடவிய பின்னர் வாசனை திரவியத்தை அதன் மீது தெளியுங்கள். இவ்வாறு செய்தால் வாசனை நீண்ட நேரம் நீடிக்கும்.

3. அழகான புருவத்திற்கு :

புருவத்திற்கு மை போடும் போது அதன் பிரஷில் சிறிதளவு வாசலினை தடவிக்கொண்டு பின்னர் மையை தொட்டு போட்டால், புருவத்திற்கு அழகான கருமை நிறம் கிடைக்கும்.

4. கரடுமுரடான பாதத்திற்கு :

உங்களது பாதத்தில் வெடிப்புகள் அதிகமாக இருக்கிறதா? அப்படியென்றால் பெட்ரோலியம் ஜெல்லியை இரவு தூங்கும் முன்னர் வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவிக்கொண்டு, சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குகள். இது போன்று செய்தால் சில நாட்களில் வெடிப்புகள் மாயமாக மறையும்.

5. அடர்த்தியான புருவம் :

பெட்ரோலியம் ஜெல்லி புருவத்தையும், கண் இமைகளையும் நன்றாகவும், விரைவாகவும் வளர வைக்கும். எனவே சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியை புருவம் மற்றும் இமைகளில் தடவிக்கொள்ளுங்கள். இது உங்களது புருவத்தையும், கண் இமைகளையும் அடர்த்தியாக்கும்.

app lashes2eyes

Related posts

தெரிஞ்சிக்கங்க… உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும் பொருட்கள் இதுதான்..!!!!

nathan

கண்ணாடி அணியும் பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

nathan

முக சொர சொரப்புகள், கருமை ஆகியவற்றை குணப்படுத்த அஞ்சறை பெட்டி!…

sangika

உங்களுக்கான தீர்வு! இளமையான முகத்திற்கு காபி பவுடர் பேஸ் பேக்

nathan

முகப் பொலிவிற்கு!

nathan

உங்களுக்கு தெரியுமா இயற்கை முறையில் வீட்டிலேயே முக அழகை பராமரிக்கும் வழிகள்

nathan

பக்கவிளைவுகள் இல்லாத. இயற்கை ஃபேஷியல்கள்.

nathan

முகம் பொலிவிழந்து கருப்பா அசிங்கமா இருக்கா?

nathan

அழகு தரும் கஸ்தூரி மஞ்சள்

nathan