இந்துக்கள் பின்பற்றும் சம்பிரதாயங்களில் ஒன்று தான் சீமந்தம் என்று கூறப்படும் வளைகாப்பு சடங்கு ஆகும்.
இந்த வளைகாப்பு விழாவானது, கர்ப்பிணி பெண்களின் 6-8 மாதத்தில் நடத்துவார்கள். அப்போது கர்ப்பிணி பெண்களின் இரண்டு கைகள் நிறைய ஒலி எழுப்பும் வளையல்களை அணுவிப்பார்கள்.
வளைகாப்பு நடத்த சிறந்த நாள் எது?
வளர்பிறை பஞ்சமியன்று, நக்ஷத்ரம் அமையும் நாள் மிகவும் உகந்தது அல்லது வளர் பிறையில் நல்ல நாளாகத் தேர்வு செய்யலாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது ஏன்?
கர்ப்பிணி பெண்களின் 6-8 மாதங்களில், வயிற்றில் உள்ள குழந்தை வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்கும்.
அதாவது குழந்தை உஷ்ணம், குளிர்ச்சி, சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து விடயங்களையும் குழந்தை கவனிக்க ஆரம்பிக்கும்.
ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்தில், அதன் கவனத்தின் துவக்கத்தை வரவேற்பதற்காக, கர்ப்பிணி பெண்களுக்கு 6-8-ஆவது மாதந்த்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மேலும் இந்த வளைகாப்பு சடங்கு, உன்னைச் சுற்றி நாங்கள் இருக்கிறோம். உன் வரவை எதிர்பார்த்து உனக்காகவே காத்திருக்கும் உனது உறவுகள் நாங்கள் தான் என்று வயிற்றில் உள்ள குழந்தைக்கு உறுதி கூறும் சடங்காகவும் வளைகாப்பு கருதப்படுகிறது.
Related posts
Click to comment