26.7 C
Chennai
Tuesday, Feb 18, 2025
201707131531186769 milk poli recipe SECVPF
இனிப்பு வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் பால் போளி

பருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இந்த பால் போளி சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று இந்த பால் போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் பால் போளி
தேவையான பொருட்கள் :

பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா – தலா கால் கப்,
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
சர்க்கரை சேர்க்காத கோவா – கால் கப்,
சர்க்கரை – கால் கப் + ஒரு டேபிள்ஸ்பூன்,
மைதா மாவு – முக்கால் கப்,
கார்ன்ஃப்ளார் – கால் கப்,
உப்பு – ஒரு சிட்டிகை,
நெய் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு,
பால் – 7 கப்,
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை.

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதாமாவு, உப்பு மூன்றையும் போட்டு அதனுடன் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து, நெய் விட்டு கலந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

* பாலை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும்.

* பால் பாதியாக சுண்டியதும் அதில், ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, குங்குமப்பூவை கலந்து இறக்கி தனியாக வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் கோவா, முந்திரி, பாதாம், பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் எல்லாவற்றை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

* பிசைந்த மைதாமாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் ஒரு டீஸ்பூன் இந்த பருப்பு கலவையை வைத்து நன்றாக அழுத்தி மூடி வைக்கவும். (எண்ணெயில் பொரிக்கும்போது வெளியில் வராத அளவுக்கு)

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் எல்லா போளிகளையும் பொரித்து எடுக்கவும்.

* பொரித்த போளிகளை சுண்ட காய்ச்சிய பால் கலவையில் போட்டு ஊற விட்டு பரிமாறவும்.

* சூப்பரான பால் போளி ரெடி.

குறிப்பு: பாலில் ஊறி சாப்பிட சுவையாக இருக்கும். சூடாகவும் சாப்பிடலாம். ஜில்லென்றும் பரி மாறலாம். 201707131531186769 milk poli recipe SECVPF

Related posts

சுவையான கோதுமை ரவை கருப்பட்டி

nathan

ருசியான சோளன் சேர்த்து செய்த கொழுக்கட்டை….

sangika

ரசகுல்லா

nathan

கடலை மாவு பர்பி

nathan

கருப்பட்டி நெய்யப்பம்

nathan

சுவையான பாதாம் பர்ஃபி

nathan

ஜிலேபி

nathan

சுவையான ரவா பணியாரம்

nathan

மாஸ்மலோ

nathan