25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
10 1499682984 1
மருத்துவ குறிப்பு

மனித இனத்தை உலுக்கும் கொடூரமான நோய்கள்

லேசான காய்ச்சல் தலைவலிக்கே சுருண்டு விடும் மனிதர்களுக்கு மத்தியில் இன்னும் மருந்தே கண்டுபிடிக்காத அல்லது குணமாகாத நோய்களுடனும் மனிதர்கள் பலர் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவ உலகமே இதுவரை கேள்விப்பட்டிராத, கோடிகளில் ஒரு சிலருக்கு ஏற்படும் அரிதான சில நோய்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
10 1499682984 1
கினியா வார்ம் சிண்ட்ரோம் (Guinea Worm Syndrome)
இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் தோலிலிருந்து புழு,திரவம் வெளிவந்து கொண்டேயிருக்கும். பாராசிடிக் என்ற ஒரு வகையான புழுக்களால் இந்த நோய் ஏற்படுகிறது. சுத்தமில்லாத தண்ணீரை பருகுவது தான் இந்நோய் வர முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. இன்னமும் இந்நோயை குணப்படுத்தும் மருந்தோ அல்லது இதனை வராமல் தடுக்கும் தடுப்பூசி என எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை 1986 ஆம் ஆண்டில் இருந்ததை விட இன்றைக்கு இந்நோயால் பாதிக்கப்படுகிறவர்களின் அளவு வெகுவாக குறைந்து விட்டது.
10 1499682999 2
ஸ்டோன் மேன் : இது பயங்கரமான நோய். நம் உடலில் உள்ள திசுக்கள், சதைப்பகுதி எல்லாம் எலும்பாய் மாறத்துவங்கும். கிட்டதட்ட உடம்பே விறைத்து போய்விடும். உள்ளுறுப்புகளும் விறைத்து விடுவதால் மூச்சுவிடுவதில் ஆரம்பித்து பல பிரச்சனைகள் ஏற்படும்.
10 1499683009 3
ப்ரோசோபகநோசியா (prosopagnosia) இவர்களுக்கு முகம் மட்டும் மறந்து போகும். நடந்த சம்பவங்கள் எல்லாம் நினைவில் இருக்கும். இது ஒரு வகையான மறதி நோய் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது முகமே மறந்து போகும் சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன. மறதி அல்லது முகம் மட்டுமே இருப்பதால் வேண்டுமென்றே சொல்வதாய் நினைத்து இந்நோயை பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை.
10 1499683019 4
நோமா : நோமா எனப்படும் ஒரு வகை கிருமியினால் முகத்திசுக்கள் எல்லாம் சிதைந்து விடும். வாயைச் சுற்றியுள்ள திசுக்கள் எல்லாம் அழிந்து விடுவதால் சாப்பிட முடியாது, பேச முடியாது, முகமே சிதைந்து காணப்படும்.
10 1499683035 5
ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் ( Alien Hand Syndrome) மூளையில் இருக்கும் நியூரான்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாறுதல்களால் இது ஏற்படுகிறது. தன்னையறியாமலேயே தன் கைகளால் தன்னையே அடித்துக் கொள்வது. தன்னையறியாமல் செய்வதால் ரத்தம் வந்தாலும் அவர்களால் நிப்பாட்ட முடியாது.
10 1499683050 6
கோட்டர்ட் டில்யூஷன் (Cotard Delusion) இது ஒரு வகையான நரம்பியல் மாற்றத்தால் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் இறந்து விட்டதாகவே நினைப்பர்.
10 1499683061 7
ஸ்லீப் பாரலிசிஸ் ( Sleep Paralysis) தூங்குதல் என்பது மனமும் உடலும் ஒன்றாக அமைதியாக இருப்பது. இது தூக்கத்தில் மட்டுமே ஏற்படக்கூடியது இது. மனம் அமைதியாய் தூங்கியிருக்க உடல் முழித்துக் கொள்ளும். மூளையின் கட்டளைகள் இன்றி நமக்கு ஆபத்து நேரும் விஷயங்களைக் கூட செய்வர். தூக்கத்தில் நடப்பது என்பது இதில் ஒரு வகையே.

Related posts

தெரிந்துகொள்வோமா? உங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய 15 விஷயங்கள்!!!

nathan

கற்றாழை சாறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்

nathan

தினந்தோறும் துளசி இலை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்!

nathan

சூடு தனிய சித்த மருந்துகள்

nathan

உங்க இரத்த அழுத்த பிரச்சனைக்கு தீர்வு தரும் நாட்டு வைத்தியங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா புற்றுநோய் வர உண்மையான காரணம் இதுதான்!

nathan

பசியின்மையை போக்கும் நெல்லிக்காய்

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய எளிய மருந்து..!

nathan

தெரிஞ்சிக்கங்க…கீல்வாதத்தை எதிர்த்துப் போராட உதவும் ஆயுர்வேத பரிந்துரைகள்..!!

nathan