26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
0q2auNp
அசைவ வகைகள்

மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

சிக்கன் பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. அந்த வகையில் இன்று சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரை கிலோ
சீரக சம்பா அரிசி – 2 டம்ளர் (அரை கிலோ)
பெரியவெங்காயம் – 2 + ஒன்று
தக்காளி – 3
பட்டை – ஒன்று
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
அன்னாசிப்பூ – 2
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – பூண்டு விழுது – இரண்டரை டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
புதினா – ஒரு கைப்பிடி
தேங்காய்த்துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
தயிர் – அரை கப்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – கால் கப்
நெய் – கால் கப்
முந்திரி – 10
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
பால் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* ப.மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

* மிக்ஸியில் துருவிய தேங்காய், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.

* பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும்.

* ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, எண்ணெயில் பிரவுன் நிறத்துக்கு வதக்கி எடுத்து தனியாக வைக்கவும்.

* ஒரு பவுலில் சிக்கன், கால் கப் தயிர், 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும், நீளமாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமிருக்கும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* இத்துடன் பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து மீண்டும் பச்சை வாசனை போக வதக்கியதும் மஞ்சள் தூள், சிக்கன் சேர்த்து வதக்கவும்.

* இத்துடன் கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து குறைந்த தீயில் சிக்கனை வேகவிடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். தயிர் மற்றும் சிக்கனில் உள்ள தண்ணீரே வேக போதுமானது. வெந்ததும் தனியாக எடுத்து ஒரு ப்ளேட்டில் வைக்கவும்.

* அரிசியை நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரை எடுத்து சுடவைத்துக் கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து வதக்கி, அரிசியைச் சேர்த்து லேசாக வதக்கவும்.

* பிறகு சுடுநீரை ஊற்றி, உப்பு போட்டு முக்கால் பாகம் வெந்ததும் இறக்கிவிடவும்.

* மீண்டும் அடுப்பில் மற்றொரு வாயகன்ற பெரிய பாத்திரத்தை வைத்து, நெய் ஊற்றி சிக்கன் மசாலாவை சேர்த்துப் பரவலாக்கவும். அதன் மீது வெந்த நெய் சோறு, பிறகு வறுத்த பிரவுன் நிற பெரியவெங்காயம் சிறிதளவு தூவவும்.

* இப்படி சிக்கன் கலவை, நெய்சோறு, வறுத்த வெங்காயக் கலவை என்கிற விகிதத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் பரப்பவும். குங்குமப்பூ ஊறிய பாலை அப்படியே பிரியாணி முழுக்க ஊற்றி, பாத்திரத்தை இறுக்கமாக மூடி, அதன் மேல் கனமான பாத்திரத்தை வைத்து, 5 நிமிடம் தம் போட்டு இறக்கினால், சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி தயார்.

* சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி ரெடி.0q2auNp

Related posts

முனியாண்டி விலாஸ் கோழி குழம்பு / Muniyandi Vilas Chicken Curry

nathan

சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு

nathan

ஸ்பெஷல்-ஈசி மட்டன் பிரியாணி,tamil samayal asaivam

nathan

முட்டை தோசை

nathan

மொறு மொறுவென்ற கோழி நக்கட்ஸ்

nathan

நெத்திலி மீன் கிரேவி

nathan

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

nathan

மட்டன் சுக்கா செய்வது எப்படி?

nathan

ஹைதராபாத் சிக்கன் 65 / Hyderabad chicken 65 Masala ,tamil samayal kurippu

nathan