28 C
Chennai
Wednesday, Nov 13, 2024
​பொதுவானவை

ஆக்கப்பூர்வமானதாக மாற்றுங்கள்

ஆக்கப்பூர்வமானதாக மாற்றுங்கள்

எப்படியும் வாழலாம்! இப்படித்தான் வாழ வேண்டும்!! நாம் வாழும் வாழ்க்கை இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கிறது. எப்படியும் வாழலாம் என்ற வழியில் சென்றால், அது ஒரு வாழ்க்கையாகவே இருக்காது என்பது எல்லாருக்கும் தெரியும்.எனவே இப்படித்தான் வாழ வேண்டும் என்ற பாதையில் செல்வது தான் முழுமையான நிறைவான வாழ்வாக இருக்கும். இந்த நிறைவான வாழ்வைப் பெற நாம், நம்மை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நெறிப்படுத்தலில் தான் சிக்கல்களே உள்ளது. புத்தாண்டு முதல் நல்ல பழக்க- வழக்கமான நெறிமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்போம்.

90 சதவீதம் பேருக்கு அது முடியாமலேயே போய்விடுகிறது. ஒவ்வொரு நாளும் நீங்கள் உருவாக்கும் வகையிலேயே அமையும். அதனை வெற்றிகரமானதாக மாற்றலாமே.

* ஒவ்வொரு நாளும் அந்த வருடத்தின் மிகச்சிறந்த நாளே.

* தன்னை மிகவும் சோகமானதாக ஆக்கிக் கொள்வது பழக்கம்தான். தன்னை மிகவும் மகிழ்ச்சியாக ஆக்கிக் கொள்வதும் பழக்கம்தான். ஏன்… நாம் நம்மை மகிழ்ச்சியானவராக ஆக்கிக் கொள்ளக்கூடாது?

* ஒவ்வொரு பிரச்சனையிலும் ஒரு நல்ல வாய்ப்பு ஒளிந்துக் கொண்டிருக்கும். அந்த வாய்ப்பினை பயன்படுத்தி பிரச்சனையை நீக்குவதே வெற்றி.

* ஆக்கப்பூர்வமே ஒளிமயமான எதிர்காலத்திற்கு இது வழி வகுக்கும்.

* நம்பிக்கையால் எதனையும் உருவாக்கவும் முடியும். அழிக்கவும் முடியும்.

* வெறுப்பு நிறைய பிரச்சனைகளை உருவாக்கி உள்ளது. ஆனால், ஒரு பிரச்சனையை கூட தீர்த்து வைத்ததில்லை.

* வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கற்றுக் கொள்கிறோம். வலி கூட, மன வலி கூட ஒரு ஆசிரியர் தான்.

* நடக்காதவைகளை நடந்துவிடுமோ என்று பயந்து வாழ்க்கையை வீணடித்தவர்கள் ஏராளம், ஏராளம்.

* உலகில் உள்ள அனைவருக்கும் அன்பு வேண்டும்.

* நம்மை நாம் மாற்றிக்கொண்டால் நம்மை சுற்றியுள்ள அனைத்தும் நன்றாகவே மாறிவிடும்.

ஆக்கப் பூர்வமாக சிந்திப்பது எப்படி?

ஆக்கப்பூர்வமான சிந்தனையின் பலன்களை உணருங்கள்

* அன்றாட வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும்.

* உடல் நலமும், உள்ள நலமும் நன்கு இருக்கும்.

* ஆயுள் கூடும். * மன உளைச்சல் இராது.

* அடிக்கடி ஜலதோஷம் பிடிக்காது.

* கடுமையான நேரங்களை எளிதில் கையாள முடியும்.

* உறவுகள் சிறப்பாக இருக்கும். உங்கள் செயல்களுக்கு நீங்களே பொறுப்பாளி என்பதனை உணருங்கள்

* நாள் ஒன்றுக்கு மனிதனுக்கு 50,000+ எண்ணங்கள் தோன்றுகின்றன. இவை உங்களை மகிழ்ச்சியாகவோ, கோபமாகவோ, சோகமாகவோ மாற்றும். உங்கள் உள் உணர்வுகளை பிறர் அறிய முடியாது. ஆக, இந்த எண்ணங்களை ஆக்கப் பூர்வமானதாக ஆக்கி விடுங்கள். உங்களது அழிவுப் பூர்வமான எண்ணங்களை (பாசிடிவ் எண்ணங்களை) நீங்க முடிவெடுங்கள்.

* அன்றாடம் ஆக்கப்பூர்வமாக எதனையும் நினைக்கப் பழகுங்கள். இதனைச் செய்யும் பொழுது உங்களால், உங்களின் அழிவுப் பூர்வமான எண்ணங்களை அடையாளம் கண்டு கொள்ளமுடியும். உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்

* நல்லதோ, கெட்டதோ உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை எழுதுங்கள். சிறிதுநேரம் பொறுத்து நீங்களே அதனை படித்துப் பாருங்கள். தீயனவற்றை மனம் தானே ஒதுக்கிவிடும்.

அடையாளம் காட்டும் செயல்கள் :

* ஒரு செயல் தவறாக நடந்துவிட்டது என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கமாட்டார்கள். மற்றவர்கள் குறை கூறுவதை நினைத்து புழுங்க மாட்டார்கள். அவர்களது பொறுப்பும், செயலை ஆற்றும் கடமையையும் முழுமையாய் அவர்கள் செய்தாலும் வாழ்க்கை அத்தனை எளிதானதல்ல என்பதினை நன்கு புரிந்தவர்களாக இருப்பார்கள்.

* அவர்களால் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் அவர்களை வைத்திருக்க முடியும். பிறர், அவரை கட்டுப்படுத்தும் அவசியம் இராது.

* வறட்டு கவுரவங்களும், விடாப்பிடி பேச்சுக்களும் அவர்களிடம் இராது. எது சரியோ அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வார்கள்.

* பிறரை குளிர வைக்க, மகிழ வைக்க தன்னை கஷ்டப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். மாறாக நியாயமாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள்.

* தைரியம் என்ற பெயரில் முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

* கடந்த கால சில வேதனை நிகழ்வுகளிலேயே மூழ்க மாட்டார்கள்.

* ஒரு தோல்வியிலேயே மற்றவர்களைப் போல் சுருண்டு விட மாட்டார்கள்.

* பிறர் வெற்றிகளை உண்மையாய் பாராட்டுவார்கள்.

* தனிமையும், அமைதியும் அவர்களை அச்சுறுத்தாது.

* எந்த ஒரு வேலையிலும் பூரண உழைப்பை அளிப்பார்கள். மேம்போக்கான வெற்றிகளை அவர்கள் மனம் ஏற்றுக்கொள்ளாது.

Related posts

சுவையான கேழ்வரகு புட்டு

nathan

சுவையான உருளைக்கிழங்கு தோசை

nathan

சுவையான ஓட்ஸ் ரவா தோசை

nathan

உங்கள் இரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா… கட்டை விரல் போதும்! கட்டாயம் படிக்கவும்..

nathan

இணையதள குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்ள பெண்களுக்கு யோசனைகள்

nathan

பைனாபிள் ரசம்

nathan

கத்திரிக்காய் தொக்கு – Brinjal Thokku

nathan

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்

nathan

ஸ்வீட் கார்ன் புலாவ்

nathan