24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
மருத்துவ குறிப்பு

ஒரு மாதத்திற்குள் மாரடைப்பு வரப் போகிறது என்பதை வெளிகாட்டும் 6 அறிகுறிகள்!

ஒருவரது இதயம் பலவீனமாக உள்ளது அல்லது அவருக்கு ஓரிரு மாதங்களில் மாரடைப்பு ஏற்படலாம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் சிலவன இருக்கின்றன. இதை வைத்து முன்கூட்டிய நாம் பாதுகாப்பாக இருந்துக் கொள்ள வேண்டும்.
மாரடைப்புக்கு மட்டுமல்ல, நமது உடலில் எந்த ஒரு நல்ல, தீய மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதை குறித்து நமது உடல் ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தி நம்மை ஜாக்கிரதையாக இருக்க சொல்லி வலியுறுத்தும்.
இனி, ஒருவருக்கு மாரடைப்பு வர போகிறது என ஒரு மாதத்திற்கு முன்னரே வெளிப்படும் அறிகுறிகள்…

மிகையான மயக்கம்! மாரடைப்பு ஏற்பட போகிறது என்பதை வெளிப்படுத்தும் முதல் அறிகுறியே இதுதான். மிகையான மயக்கம். தொடர்ந்து நாள் முழுதும் வேலை செய்து கொண்டே இருந்தால் இந்த மயக்க நிலை தென்படுவது இயல்பு. ஆனால், பெரிதாக எந்த வேலையும் செய்யாத போதும் தொடர்ந்து இந்த மயக்க நிலை தென்படுவது மாரடைப்பிற்கான அறிகுறியாகும். நீங்கள் இதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தூக்க கோளாறுகள்! இரண்டாவதாக காணப்படும் அறிகுறி தூக்க கோளாறுகள். மாரடைப்பு ஏற்பட போகிறது என்ற சூழல் உங்களை நெருங்கும் போது, அதன் காரணத்தால் தூக்க கோளாறுகள் உண்டாகும். சரியாக தூக்கமே வராது. தூங்கிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி விழிப்பு ஏற்படும், நள்ளிரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவீர்கள் அல்லது நள்ளிரவில் அதிக தாகம் எடுக்கும். பொதுவாக உங்களுக்கு இந்த எந்த கோளாறும் இல்லாமல், திடீரென எப்படி சில மாற்றங்கள் காண துவங்கினால் நீங்கள் கட்டாயம் மருத்துவரை காண வேண்டும்.

மூச்சு திணறல்! முன்பு இல்லாமல் திடீரென மூச்சு திணறல் உண்டாவது மூன்றாவது மாரடைப்பு அறிகுறியாக காணப்படுகிறது. ஒருவேளை உங்களுக்கு இதய கோளாறுகள் இருந்தால் தான் திடீரென இந்த மூச்சு திணறல் கோளாறு ஏற்படும். உங்கள் இதயத்திற்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்றால் தான் இந்த மூச்சு திணறல் கோளாறு தென்படும்.

அஜீரணம்! மற்றுமொரு மாரடைப்பு அறிகுறியாக இருப்பது செரிமான கோளாறு, அஜீரணம். எப்போதுமே வயிற்றில் ஏதோ சத்தம் உண்டாவது போன்ற உணர்வு ஏற்படுவது இயல்பாக எடுத்துக் கொள்ள கூடாது. மேலும், சில சமயங்களில் காரமான, மசாலா அதிகம் கலந்த உணவு அல்லது கடினமான உணவுகள் உட்கொண்டால் கூட இந்த உணர்வு தென்படலாம்.

பதட்டம்! எப்போதும் இல்லாமல் திடீரென நீங்கள் மிக பதட்டமாக அல்லது படபடப்பாக உணர்கிறீர்கள் என்றால், உடன மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். இதுவும் மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே வெளிப்படுத்தும் அறிகுறி தானாம்.

உடல் சோர்வு! எப்போதும் உடல் சோர்வாக வலிமை இன்றி காணப்படுவது அல்லது தோள்ப்பட்டை கனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவது. உங்கள் இதயத்திற்கு சரியான அளவு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால். தண்டுவடத்தில் மற்றும் இதயத்திற்கு இடையே இருக்கும் நரம்புகளில் ஏற்படும் தாக்கத்தால், நீங்கள் தோள்பட்டை வலி உணர வாய்ப்புகள் உள்ளன.

Related posts

தவறான உறவால் வாழ்க்கையை இழக்கும் பெண்கள்

nathan

சிறுநீரக கல்லை கரைக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்

nathan

தைராய்டு பிரச்சனைக்கான முக்கிய காரணங்கள்!!

nathan

அலட்சியம் வேண்டாம் உங்களுக்கு இந்த மாதிரி இருக்கா?

nathan

அன்று தங்கப் பல்…இன்று கோல்டு ஃபில்லிங்!

nathan

நீங்கள் இப்படியே பண்ணிட்டு இருந்தா சிறுநீரக கல் வந்துரும்னு தெரியுமா?கண்டிப்பாக வாசியுங்க….

nathan

படிக்கத் தவறாதீர்கள்! வாரத்தில் ஒரு நாள் சிறுநீரகக் கற்களை கரைக்க உண்ண வேண்டிய உணவுகள்

nathan

சிறகுகள் தந்த இனிய கணவர்களுக்கு மனைவிகளின் பிரிய நன்றிகள்!

nathan

எளிதாக கட்டுபடுத்தக்கூடியதே நீரிழிவு நோய்!

nathan