24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
kbpGybL
கேக் செய்முறை

சாக்லெட் பிரெளனி

என்னென்ன தேவை?

மைதா – 200 கிராம்,
வெண்ணெய் – 100 கிராம்,
பொடித்த சர்க்கரை – 50 கிராம்,
கன்டென்ஸ்டு மில்க் – 1 டின்,
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்,
தேவையானால் பொடித்த வால்நட்ஸ் – 50 கிராம்,
குக்கிங் டார்க் சாக்லெட் – 100 கிராம்,
பட்டர் பேப்பர் – 1.

எப்படிச் செய்வது?

டார்க் சாக்லெட்டையும், வெண்ணெயையும் உருக்கவும். ஒரு பாத்திரத்தில் கன்டென்ஸ்டு மில்க், சர்க்கரையை சேர்த்து எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். இத்துடன் சூடான சாக்லெட் சிரப்பை ஊற்றி கிளறவும். பின்பு இதில் மைதா, பேக்கிங் பவுடர் சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு கட்டியில்லாமல் நன்கு கலந்து, வெண்ணெய் தடவிய அல்லது பட்டர் பேப்பர் போட்ட கேக் டின்னில் ஊற்றி, 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட அவனில், 25-30 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும். ஆறியதும் பரிமாறவும். குறிப்பு: பிரெளனியை பரிமாறும் பொழுது மைக்ரோவேவ் அவனில் 30 நிமிடம் சூடு செய்து வெனிலா ஐஸ்கிரீமுடன் பரிமாறவும்.kbpGybL

Related posts

காபி  கேக்

nathan

மைக்ரோவேவ் சாக்லேட் கேக்

nathan

வெனிலா ஸ்பான்ஞ் கேக்

nathan

சூப்பரான பேரீச்சம்பழ கேக் செய்வது எப்படி???இதை படிங்க…

nathan

ருசியான சாக்லேட் கேக் தயார்…

sangika

ஸ்பாஞ்ச் கேக் : செய்முறைகளுடன்…!​

nathan

சுவையான கோகோ கேக் சுவைத்து பாருங்கள்…

sangika

சாக்லேட் கேக்

nathan

மினி பான் கேக்

nathan