25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
59 1 ed670b272bd62557323d216df8927f6a
மருத்துவ குறிப்பு

உடலில் சூட்டை போக்க எளிய வழி: பரீட்சித்து பாருங்களேன்.!

உடலில் சூட்டை போக்க எளிய வழி: பரீட்சித்து பாருங்களேன்.!
உடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அதில் முக்கியமானது உடலைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் வெப்பம்.

கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இக்காலத்தில் தான் பலருக்கும் அடிக்கடி உடல் சூடு பிடித்துக் கொள்ளும்.

இப்படி உடலின் வெப்பம் அதிகரித்தால், வயிற்று வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் என்று பலவற்றையும் சந்திக்கக்கூடும்.

ஆனால் இந்த உடல் சூட்டைக் குறைப்பதற்கு ஒருசில இயற்கை வைத்தியங்கள் உள்ளன. அவற்றை அன்றாடம் கோடைக்காலத்தில் பின்பற்றினால், உடல் சூட்டில் இருந்து விடுபடலாம்

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் எளிய வழி வாசகர்களுக்காக. பரிட்சித்துத்தான் பாருங்களேன்
பருவ நிலை மாற்றமே நமது உடல் உஷ்ணமாவதற்கு பெரிதும் காரணம். வெயில் நேர பயணங்கள், ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்வது. காலத்திற்கு தகுந்த மாதிரி கயிறு கட்டில்கள், நாற்காலிகள் மறைந்து சோபா,குஷன் சேர் போன்ற மெத்தைகள் நமது உடம்பின் சூட்டை அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக நமது உடலில் ஆரோக்கியம் குறைவதோடு பெரும்பாலான நோய்கள் தோன்ற காரணமாகவும் அமைகிறது.

வெப்பம் காரணமாக பெரும்பாலோனோர் தோல் நோயினால் பாதிக்கப்பட்டுவதை பார்த்திருப்போம். தற்போது அதை தவிர்க்க ஏராளமான சன் கிரீம்கள் வந்துள்ளன. இந்த கிரிம்கள் அனைத்தும் கெமிக்கல்களால் தயார் செய்யப்படுகிறது.

இதை உபயோகிப்பதன் காரணமாக புதுப்புது வகையான நோய்கள், முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் உபாதைகள் ஏற்படுகிறது.

இதுபோன்ற சரீர பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஏற்கனவே காஞ்சி மகா பெரியவாள் அற்புதமான, ஆரோக்கியமான தீர்வை சொல்லியுள்ளார்கள்.

நீங்களும் உபயோகப்படுத்தி பாருங்களேன்..

தேவையான பொருள்கள்

நாம் அன்றாடம் உபயோகிக்கும்

1, நல்லெண்ணெய்

2.பூண்டு

3.மிளகு

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

சூடு ஆறினதும் எண்ணையை இரு கால்களின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.

2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.

இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.

2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது.

சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம். மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.

இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.

அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.

இதனை I.T துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும்.

மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

அதேபோல் சனி நீராடு என்பார்கள் பெரியவர்கள். இன்றைய காலக்கட்டத்தில் அதை யாரும் கடைபிடிப்பதில்லை.

வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமையன்று உச்சி முதல் உள்ளங்கால்வரை நன்றாக நல்லெண்ணை தேய்த்து, வெதுவெதுப்பான சூடுநீரில் குளித்தால் உடலில் உள்ள சரும நோய்கள் முதற்கொண்டு உடல் சூடுவரை அனைத்தும் தணிந்துவிடும். உடலும் சுறுசுறுப்பாக இருக்கும்.

அதுபோல தினசரி குளிக்கும்போது காலின் நகக்கண்களில் முதலில் தண்ணீர் ஊற்றி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஊற்றிக்கொண்டு கடைசியில் தலையில் ஊற்ற வேண்டும்.

இதுபோன்ற பழங்கால நடைமுறைகளை கடைபிடித்தால் நாம் நோயின்றி நூறாண்டு வாழலாம் என்பதில் சந்தேகமில்லை.59 1 ed670b272bd62557323d216df8927f6a

Related posts

கொசுவை விரட்டும் போர்வை!

nathan

சிறுநீரகக்கற்கள் – தொல்லையும் தீர்வும்

nathan

பெண்கள் உத்வேகத்துடன் பணியாற்ற நிறுவனங்கள் செய்ய வேண்டியவை

nathan

இளைப்பு நோய் போக்கும் திப்பிலி

nathan

கண்ணை மறைக்கும் மது போதை

nathan

உங்களுக்கு தெரியுமா உயிரை பறிக்கும் இதய நோயை நெருங்க விடாமல் தடுக்கும் உணவுகள்!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் கொடுப்பதால் இருதய பிரச்சனைகளுக்கான அபாயம் குறையுமா?

nathan

அவசியம் படிக்க..உங்க டூத்பேஸ்ட் ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தும் 4 அறிகுறிகள்!

nathan

உங்கள் வீட்டில் ‘ஹெல்த் கிட்’ இருக்கிறதா?

nathan