29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
8T9rZc1
அசைவ வகைகள்

மத்தி மீன் வறுவல்

மத்தி மீனில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இன்று மத்தி மீனை வைத்து கேரளா ஸ்டைலில் வறுவல் செய்வது எப்படி என்ற பபர்க்கலாம்.

கேரளா ஸ்டைல் மத்தி மீன் வறுவல்
தேவையான பொருட்கள் :

மத்தி மீன் (sardine) – அரை கிலோ
மிளகு – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 20 பல்
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
தயிர் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை :

* மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

* மிளகு, சீரகம், சோம்பு இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைக்கவும். இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மிளகு, சீரகம், எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, தயிர், உப்பு போட்டு நன்கு கலந்து, அதனுடன் கழுவிய மீனை சேர்த்து நன்றாக கலந்து குளிர்சாதன பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும். 3 – 4 மணி நேரம் வைக்கலாம்.

* அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலா பிசறிய மீனை மெதுவாக அடுக்கி வைத்து, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும்.

* அதனை கொஞ்ச நேரம் கழித்து, மீன் உடைந்து விடாமல் மெதுவாக புரட்டிவிடவும். எண்ணெய் போதவில்லை என்றால் ஊற்றவும். அடுத்த பக்கமும் வெந்ததும், மீனை உடையாமல் புரட்டவும். இரு பக்கமும் மீன் மொறு மொறு என வெந்ததும் எடுத்து தட்டில் வைத்து கறிவேப்பிலை தூவி சூடாக பரிமாறவும்.

* இந்த வறுத்த மத்தி மீனை எந்த குழம்பு சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம்.8T9rZc1

Related posts

சுவையான உடைத்த முட்டைக் குழம்பு

nathan

ரமலான் ஸ்பெஷல்: சிக்கன் மலாய் டிக்கா

nathan

சில்லி சீஸ் டோஸ்ட்

nathan

சுவையான இறால் குழம்பு செய்வது எப்படி?

nathan

ரமலான் ஸ்பெஷல்: காஷ்மீரி ரோகன் ஜோஷ்

nathan

இறால் மசால்

nathan

கோழி ரசம்

nathan

மட்டன் பிரியாணி,பிரியாணி, மட்டன், மட்டன் பிரியாணி

nathan

சுவையான சிக்கன் பெப்பர் ப்ரை

nathan