29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1151e0c6 ce58 425c ae53 f784f99a295d S secvpf 1
உடல் பயிற்சி

கவர்ச்சியான தோற்றம் விரும்புபவர்களுக்கான உடற்பயிற்சிகள்

கவர்ச்சியாக தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால் உடலில் உள்ள பாகங்களை நன்றாக அறிந்து அதற்கேற்ப உடற்பயிற்சியை செய்து உணவையும் உட்கொள்ள வேண்டும். பருமனாக இருக்கும் இடத்தில் மட்டும் பயிற்சி செய்து குறைப்பது முறையன்று. ஒருவர் பற்பல உடற்பயிற்சிகளையும் செய்து முழு உடலையும் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
* உடல் அமைப்பை சரி செய்ய நடனமே சிறந்த பயிற்சியாகும். நடனமாடும் போது உடலில் உள்ள அனைத்து பாகங்களும் அசைந்து பயன்படுத்தப்படுகின்றது. இதனால் உடல் முழுவதும் உள்ள எக்ஸ்ட்ரா கொழுப்புககள் கரைந்து உடலை சீர்படுத்துகிறது. தினமும் நடனப்பயிற்சி மேற்கொள்ளும் போது அது நமது உடலை நல்ல வடிவத்தில் மாற்றி உடலின் சக்தியை அதிகரிக்கிறது. ஆகையால் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கு சிறந்த பயிற்சி நடனமாகும். இது மிகவும் சிறப்பான பயிற்சியாகவும் ஆனந்தத்தை தரக்கூடியதாகவும் அமைகின்றது.

* இதயத்தை பலப்படுத்த சைக்கிளிங், தடகளம், டிரெட் மில், ஸ்டெப்பிங் மற்றும் பல பயிற்சிகள் உள்ளன. இத்தகைய பயிற்சிகள் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உங்கள் உடலுக்கு தேவையான சக்தியையும், தாங்கும் உறுதியையும் கொடுக்கின்றன.

* பேட்மிண்டன், டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதின் மூலம் எடையை குறைக்க முடியும். இவ்வாறு உடலை வடிவுப்படுத்தவும் முடியும். இத்தகைய பயிற்சிக்கு அதிக சக்தி தேவை மற்றும் இப்பயிற்சி மூலம் அதிக கொழுப்பையும் குறைக்க முடியும். இதுவும் கொழுப்பை குறைப்பதற்கான சிறந்த முயற்சியாகும்.

* ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் அதாவது கைகள், கால்கள், இடுப்பு, ஆகிய பாகங்களை நீட்டி பயிற்சியை தொடர்ந்து செய்தால் எடை வெகுவாக குறையும். உடலை கட்டுக்குள் கொண்டு வர இப்பயிற்சி உதவுகிறது. உடலுக்கு நல்ல அமைப்பையும் தருகிறது. ஸ்ட்ரெட்சிங் செய்வதால், உடல் இறுக்கமடைவதால் கவர்ச்சியான உடலை பெற முடியும்

* நீச்சல் வேறு எந்த பயிற்சியை காட்டிலும் இரு மடங்கு கலோரிகளை குறைக்க வல்லது. நீச்சல் பயிற்சி கால் மற்றும் கைகளை வலுவூட்டி உடலையும் குறைக்கிறது. ஆகையால் நீச்சலும் உடலை குறைப்பதற்கு ஒரு சிறந்த பயிற்சியாகும்.

* 200 லிருந்து 300 ஸ்கிப்ஸ் ஒரு நாளைக்கு செய்வது உங்களை கவர்ச்சியாக வைக்க உதவும். உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் சீர்படுத்தி உடலை கச்சிதமாக வைக்க உதவுகிறது.1151e0c6 ce58 425c ae53 f784f99a295d S secvpf

Related posts

இடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

nathan

பெண்களில் பலர் 30 வயது தொடுவதற்குள் வயிற்றில் ஏகப்பட்ட மடிப்புகள் விழுந்து சதைகள்

nathan

இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

nathan

அதிக உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறீர்களா? கட்டாயம் இத படிங்க!….

sangika

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய கால் பயிற்சிகள்

nathan

வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வாயு முத்திரை

nathan

புதியவர்கள் செய்யும் வொர்க் அவுட் தவறுகள்

nathan

அப்டாமினல் க்ரன்சஸ்

nathan

தொடை சதையை குறைக்க வேண்டுமா

nathan