இன்றைய பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்கள் காதல், கமிட்மெண்ட் என்று தங்களது சுதந்திரத்தை இழக்க தயாராக இல்லை.
காதலையும் கமிட்மெண்ட்டையும் விரும்பாத இன்றைய பெண்கள்
காதலில் கண்மூடித்தனமாக விழுவது ஒரு அபூர்வமான உணர்வு தான். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு காதலின் சுவை முழுமையாக தெரிவதில்லை. காதல் எல்லை இல்லாதது. அதில் எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இருக்காது. உண்மையான காதலில் அதிகம் விட்டுக்கொடுத்து போக வேண்டியது இருக்கும்.
இன்றைய தலைமுறையினர் காதல் என்ற வம்பே வேண்டாம் என்று காதலிப்பதே இல்லை. அவர்கள் ஏன் காதலிப்பதில்லை என்பதற்கான காரணங்களை பார்ப்போம்.
இன்றைய பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்கள் காதல், கமிட்மெண்ட் என்று தங்களது சுதந்திரத்தை இழக்க தயாராக இல்லை.
சிலர் உடலுறவு விசயத்தில் இருவருக்கும் சரியாக வந்தால் அதற்கு பின்னர் காதலிக்கிறார்கள். ஆனால் உடலுறவு என்பது முக்கியமில்லை.
காதல் மற்றும் வாழ்க்கைக்கு ஏராளமான விசயங்கள் தேவை என்பதை மனதில் கொள்வதில்லை. தற்காலிகமான சந்தோஷத்தை தேடி ஓடுகின்றனர்.
நாம் ஒரு மணி நேரத்தை யாருடன் வேண்டுமானாலும் செலவிடலாம். ஆனால் ஒரு நாள் முழுவதையும் ஒரு சிலருடன் மட்டும் தான் செலவிட முடியும்.
என்பதற்கு ஏற்ப இன்றைய இளைய தலைமுறை பெண்கள் தன் வாழ்க்கையில் நிறைய பேரை பார்த்து அதில் சிறந்தவர் யாரோ அவரை அடைய வேண்டும் என நினைக்கிறார்கள். இதற்கு பெயர் தான் டேட்டிங். ஆனால் இவர்கள் மனதிற்கு பிடித்தவர்களை காதலித்து அவரை அனைத்திலும் பேஸ்ட்டாக மாற்ற தயாராக இல்லை.
டெக்னாலஜி நமக்கு இடையில் இருக்கும் இடைவெளியை குறைத்துவிட்டது. நேரில் பார்க்கும் அனுபவத்தை ஸ்கைப், ஸ்நேப் சாட், மேசேஜ் ஆகியவை குறைக்கின்றன. இதனால் அவர்களுக்கு காதலின் வலிமை, காத்திருத்தல், சகிப்புத்தன்மை ஆகியவை தெரியாமல் போகிறது.
காதலை விட இன்றைய தலைமுறையினருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய பல விஷயங்கள் இருக்கின்றன. காதலுக்கு முக்கியத்துவம் தருவதில்லை, இன்றைய பிஸியான வாழ்க்கையில் லவ்வருக்கு ஏது எங்கிறார்கள்.
காதல் திரில் மற்றும் ஆச்சரியங்களை எதிர்பார்த்து வருவதில்லை. இன்றைய தலைமுறையினர் பலர் பார்ட்டி, சினிமா என்று செல்ல ஒரு துணையை தான் தேடுகிறார்கள்.
அவர்கள் நல்ல நினைவுகளை மனதில் வைத்துக்கொள்ளவும், அமைதியின் மொழியை கூட புரிந்து கொள்ளவும், வாழ்நாள் முழுவதும் காதலித்தவரும் இருக்கும் சளிப்பான வாழ்க்கையை விரும்புவதில்லை.