முடி உதிர்தல் மிகச் சாதாரணமானது. ஆனால் அதிகமாக உதிரும்போது சற்று கவனிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் முடி பலமில்லாமல் அடர்த்தி குறைந்து பாதிக்கப்படும்.
உங்கள் கூந்தலுக்கு போஷாக்கு அளிக்கும்போது கூந்தலின் வேர்ப்பகுதிகள் ஊட்டம் பெறும். இதனால் கூந்தல் உதிர்தல் நின்று பொலிவு பெறும். அவ்வாறு ஒரு செய்முறையை காண்போம்.
எலுமிச்சை டோனர் :
தேவையானவை :
எலுமிச்சை சாறு – கால் கப்
நீர் – 3/4 கப்
தேன்- 2 ஸ்பூன்
ஸ்ப்ரே பாட்டில் – 1
செய்முறை :
எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் நீர் மற்றும் தேன் மேலே சொன்ன அளவுப்படி கலக்குங்கள். அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தலையில் குறிப்பாக ஸ்கால்ப்பில் படும்படி தலை முழுவதும் இந்த கலவையை ஸ்ப்ரே செய்யுங்கள். பிறகு மசாஜ் செய்யவும்.அப்படியே 2 மணி நேரம் வைத்திருங்கள்.
2 மணி நேரத்தில் , அரை மணி நேரமாவது சூரிய வெளிச்சம் படும்படி இருந்தால் நல்ல பலன் கிடைக்கும், பிறகு நீரினால் உங்கள் தலைமுடியை அலசவும். மாதம் 3 முறைக்கு மேல் இந்த குறிப்பை உபயோகிக்க வேண்டாம்.
எலுமிச்சை பொடுகை வரவிடாமல் தடுக்கும். கிருமிகள் தொற்றை குறைத்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். தேன் தகுந்த ஈரப்பதத்தை கூந்தலுக்கு அளித்து முடி உதிர்தலை தடுக்கும்.