26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
mouth 18 1487397659
முகப் பராமரிப்பு

வாய் மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்…

சிலருக்கு முகத்தின் கன்னம், நெற்றி போன்ற பகுதிகள் மட்டும் நல்ல நிறத்திலும், வாய், தாடை போன்ற பகுதிகள் கருமையாகவும் இருக்கும். இதனால் முகத்தின் அழகே அசிங்கமாக காட்சியளிக்கும். ஆகவே பலர் இதனை மறைப்பதற்கு பல அடுக்கு மேக்கப்புகளைப் போடுவார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே சில நிவாரணிகள் உள்ளன. இங்கு வாய் மற்றும் தாடைப் பகுதியில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கற்றாழை ஜெல் தினமும் கற்றாழை ஜெல்லை வாய் மற்றும் தாடைப் பகுதியில் தடவி வந்தால், அப்பகுதிகளில் போதிய ஈரப்பசை கிடைப்பதோடு, கற்றாழையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் விரைவில் கருமை அகலும். கற்றாழை ஜெல்லை தினமும் இரவில் முகத்தில் தடவி மறுநாள் காலையில் கழுவ, இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

புகைப்பிடிப்பது வாய் மற்றும் தாடைப் பகுதிகள் கருமையாக இருப்பதற்கு புகைப்பிடிப்பதும் ஓர் காரணம். மேலும் புகைப்பிடித்தால், விரைவில் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு, முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்.

கடலை மாவு & பால் கடலை மாவை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீர் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் முழுமையாக நீக்கப்பட்டு, சருமப் பொலிவு அதிகரிக்கும்.

மஞ்சள் மஞ்சளை பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, கருமைக்கு காரணமானதை வேரோடு நீக்கிவிடும்.

வைட்டமின் ஈ ஆயில் வைட்டமின் ஈ சருமத்திற்கு போதிய ஈரப்பசை வழங்கி, சரும கருமையைப் போக்கும். அதற்கு தினமும் இரவில் வைட்டமின் ஈ நிறைந்த ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் கழுவுங்கள். இப்படி தினமும் செய்ய, விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ரெட்டினால் க்ரீம் ரெட்டினால் க்ரீம், சுருக்கமான சருமம் கொண்டவர்களுக்கும் ஏற்றது. ஏனெனில் இது சருமத்தில் உள்ள சுருக்கமான தோலை உரித்து, புதிய ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும். அத்தகைய க்ரீம்மை வாய் மற்றும் தாடைப் பகுதிகளில் தடவி வந்தால், கருமை விரைவில் அகலும்.

mouth 18 1487397659

Related posts

முகமும், கழுத்தும் ரொம்ப கருப்பா இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஆரஞ்சு ஃப்ரூட் பேக் முகத்தை பளபளப்பாக்கும்!….

nathan

முகம் பார்க்க மிகவும் வறண்டு காணப்படுகிறதா..? அப்போ இத செய்யுங்கள்!…

sangika

வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து பிளாக் ஹெட்ஸை போக்க டிப்ஸ்!………

nathan

உங்க உதடு கன்னங்களில் உண்டாகும் கருமையை போக்குவது எப்படி தெரியுமா?

nathan

பார்ட்டிக்கான ஷாம்பெயின் ஃபேஷியல்

nathan

முகப்பருக்கள், தோல் சுருக்கம் போக்கி முகத்தின் நிறத்தை மேம்படுத்தும் கொத்தமல்லி!

nathan

கோடை வெயில் தூசு மாசிலிருந்து உங்க சருமத்தை பாதுகாத்து பளபளப்பாக ஜொலிக்க வைக்க

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்திற்கு இளமை தரும் உப்பு, சீனி, தவிடு முயன்று பாருங்கள் !

nathan