31.5 C
Chennai
Thursday, Jul 3, 2025
14 1487072779 3 pic5
முகப் பராமரிப்பு

இரவில் படுக்கும் முன் இந்த ஃபேஸ் பேக்கை போட்டால், சீக்கிரம் வெள்ளையாகலாம்!

உப்தன் ஃபேஸ் பேக்குகள் என்பது பாரம்பரிய அழகு பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஓர் ஃபேஸ் பேக்காகும். இந்த மாதிரியான ஃபேஸ் பேக்குகள் சரும கருமையைப் போக்கவும், இறந்த செல்களை நீக்கவும், சரும பிரச்சனைகளான கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்றவற்றை நீக்கவும் செய்யும்.

இந்த ஃபேஸ் பேக்கை செய்ய நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களே போதும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் போட்டால், சருமத்தின் நிறம் மேம்படுவதைக் காணலாம். இங்கு ஓர் அற்புதமான உப்தன் ஃபேஸ் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு மாவு – 1 ஸ்பூன்
பயித்தம் பருப்பு மாவு – 1 ஸ்பூன்
வெள்ளை சந்தன பவுடர் – 1/2 ஸ்பூன்
சிவப்பு சந்தன பவுடர் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் – 1 சிட்டிகை
ரோஸ் வாட்டர் – தேவையான அளவு

செய்முறை #1
முதலில் ஒரு பௌலில் உளுத்தம் பருப்பு மாவு மற்றும் பயித்தம் பருப்பு மாவை போட்டுக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2 பின் அத்துடன் சந்தனப் பொடிகள் இரண்டையும் சேர்த்து, மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #3 பின்பு ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து கொண்டால், ஃபேஸ் பேக் தயார்.

செய்முறை #4 அடுத்து இந்த ஃபேஸ் பேக்கை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடம் நன்கு உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

செய்முறை #5 இறுதியில் மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவிக் கொள்ள வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்தால், சருமம் எப்போதும் பொலிவோடும், பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

14 1487072779 3 pic5

Related posts

இந்த இயற்கையான பொருட்களை வச்சி வீட்டுல தயாரிக்கும் ஃபேஸ்பேக்

nathan

வெயில் காலங்களில் முகத்துக்கு பவுடர் – கிரீம் பயன்படுத்த வேண்டாம்

nathan

முகத்தின் அழகு பழத்தில் தெரியும்! அழகு குறிப்புகள்!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அழகில் செலுத்தவேண்டிய அக்கறை

nathan

அம்மா தன் பெண்ணிற்கு சொல்லும் அழகின் ரகசியங்கள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! செக்க சிவந்த மென்மையான உதடுகளை பெற, இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள்..

nathan

மஞ்சள் பேக் போடுவதால் அதிகரிக்கும் முக அழகை கவனித்துள்ளீர்களா?

nathan

ஃபேஷியல் டிப்ஸ்

nathan

எலுமிச்சை பேஷியல்

nathan