26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
கர்ப்பிணி பெண்களுக்குமருத்துவ குறிப்பு

தாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்

தாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தாய் பாதுகாப்பாக இருந்தால் தானே வயிற்றில் உள்ள சிசுவும் பாதுகாப்பாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவுகள் தாய் மற்றும் கருவில் இருக்கு சிசு என இருவருக்குமே நல்லதல்ல. உங்கள் வயிற்றில் உள்ள குழந்தை பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் தவிர்க்க வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.• காப்ஃபைன் அளவு அதிகமாக உள்ள பானங்களான சோடா, கோலா போன்றவைகளை தவிர்க்கவும். கர்ப்ப காலத்தின் போது அளவுக்கு அதிகமாக காப்ஃபைனை உட்கொள்வது, குறிப்பாக முதல் மூன்று மாதங்களில், கருச்சிதைவுகள் ஏற்படுத்தும். அல்லது பிற உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக காப்ஃபைனை உட்கொள்ளும் போது, குறைவான அளவு மற்றும் எடையுடன் பிறத்தல், குறைப்பிரசவம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகிறது. இதனால் பல வித சிக்கல்கள் உண்டாகும்.

• பச்சையான, சமைக்கப்படாத உணவுகளான பச்சை முட்டைகள், இறைச்சிகள் மற்றும் மீன் போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது. பச்சையான, சமைக்கப்படாத கடல் உணவுகள் தாய்க்கு சில தொற்றுக்களை ஏற்படுத்தும். பச்சை முட்டைகள் அல்லது இறைச்சிகளை உட்கொண்டாலும் கூட கர்ப்பிணி பெண்ணுக்கு குறிப்பிட்ட சில ஒட்டுண்ணி நோய்கள் உண்டாகலாம். ஒரு வேளை, கர்ப்பிணி பெண்ணுக்கு இவ்வகையான உணவுகளினால் தொற்று அல்லது நோய் ஏற்பட்டால், அது தொப்புள் கொடி வழியாக குழந்தையையும் அடையலாம். இதனால் குறைப்பிரசவம் ஏற்படக் கூடும் அல்லது மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தையாக பிறக்க கூடும்.

• கர்ப்ப காலத்தின் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது, பச்சை உணவுகள், பதப்படுத்தப்படாத பால் மற்றும் சீஸ் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படும். பதப்படுத்தப்படாத சீஸ் அல்லது பாலில் பாக்டீரியாக்கள் இருக்கலாம். இது தொப்புள் கொடி வழியாக சிசுவை அடைந்து, கருச்சிதைவை தூண்டலாம். பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், நீங்கள் வாங்கும் பால் மற்றும் சீஸின் லேபிளை நன்றாக படிக்கவும். பால் மற்றும் சீஸ் பதப்படுத்தப்பட்டு கர்ப்பிணி பெண்கள் உண்ணும் நிலையில் உள்ளது என்பதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என FDA கட்டாயப்படுத்தியுள்ளது. பதப்படுத்தப்பட்ட விவரம் இல்லை என்றால் அதனை உடனே தவிர்த்து விடவும்.

• கர்ப்பிணிகள் தாங்கள் குடிக்கும் தண்ணீர் மற்றும் உணவின் மீது பாதுகாப்பாக இருக்க வேண்டும். தெருவோரம் கிடைக்கும் உணவுகளை உண்ணுவதால் தொற்றுக்கள் ஏற்படலாம். மேலும் கர்ப்ப காலத்தில், பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும். இதனால் மற்ற நேரங்களை காட்டிலும் இந்நேரத்தில் எளிதில் தொற்றுக்களுக்கு ஆளாகலாம்.

Related posts

சிறுநீர் பரிசோதனை செய்யப் போகிறீர்களா?

nathan

ஸ்கூல் வேனை குழந்தைகள் சிரித்தபடி வரவேற்க இதெல்லாம் செய்யலாம்!

nathan

பெண்கள் திருமணமான புதிதில் கணவன் எப்படி இருக்க விரும்புவார்கள்

nathan

மாசத்துக்கு இரண்டு பீரியட்ஸ் வருதா.. காரணம் இதுவா இருக்கலாம்

nathan

கருச்சிதைவின் வெவ்வேறு விதங்கள்

sangika

குழந்தைகளுக்கு சமூக வலைத்தளங்களில் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

அல்சரால் கஷ்டப்படுறீங்களா? இதோ அற்புதமான சில வீட்டு வைத்தியங்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த அறிகுறிகள் வைத்து நுரையீரல் புற்றுநோயை முன்னரே அறிந்துவிடலாம்

nathan

புற்றுநோய் அறிகுறிகள் தெரிந்து கொள்வது எப்படி?

nathan