29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
15 1487140286 5 rosewater
தலைமுடி சிகிச்சை

ரோஸ் வாட்டர் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்குமா? இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க..

பெரும்பாலும் ரோஸ் வாட்டரை சரும பராமரிப்பிற்கு தான் அதிகம் பயன்படுத்தி பார்த்திருப்போம். ஆனால் இந்த ரோஸ் வாட்டரைக் கொண்டு தலைமுடியையும் பராமரிக்கலாம் என்பது தெரியுமா? ரோஸ் வாட்டரில் புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் ஏராளமாக உள்ளது.

குறிப்பாக ரோஸ் வாட்டர் பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்வது, முடியின் அடர்த்தியை அதிகரிப்பது, முடியின் பொலிவை அதிகரிப்பது என்று பல நன்மைகளை வழங்கக்கூடியது. ஆகவே தலைமுடி பிரச்சனைகளைப் போக்க கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, செம்பருத்தி போன்று, ரோஸ் வாட்டரையும் பயன்படுத்தலாம்.

இங்கு ரோஸ் வாட்டரை எப்படியெல்லாம் தலைமுடிக்கு பயன்படுத்தலாம் என்று சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து வாரம் ஒருமுறை செய்து, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

ரோஸ் வாட்டர் – கற்றாழை ஜெல் ரோஸ் வாட்டர் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலந்து ஸ்கால்ப் முதல் தலைமுடியின் முனை வரை தடவி 1 மணிநேரம் கழித்து, அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், முடியின் வறட்சி நீங்கி, மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

ரோஸ் வாட்டர் – வைட்டமின் ஈ எண்ணெய் 2-3 வைட்டமின் ஈ மாத்திரையில் உள்ள எண்ணெயுடன் 4-5 துளிகள் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஊற வைத்து அலசினால், பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். அதிலும் வாரம் ஒருமுறை இச்செயலை செய்தால், ஸ்கால்ப் ஆரோக்கியமாக இருக்கும்.

ரோஸ் வாட்டர் – க்ரீன் டீ ரோஸ் வாட்டர் மற்றும் க்ரீன் டீயை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் தலைக்கு ஷாம்பு போட்டு தலைமுடியை அலசியப் பின், இந்த கலவையால் தலைமுடியை அவசினால், தலைமுடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதோடு, அதன் வலிமையும் அதிகரிக்கும்.

ரோஸ் வாட்டர் – உப்பு 1 டேபிள் ஸ்பூன் உப்புடன் 4- துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடலி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், மெலிந்த முடியை அடர்த்தியாக்கலாம்.

ரோஸ் வாட்டர் – கிளிசரின் 1 டீஸ்பூன் கிளிசரினுடன், 4-5 துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவினால், தலைமுடி மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும்.

ரோஸ் வாட்டர் வெறும் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து ஸ்கால்ப்பில் தடவினால், ஸ்கால்ப் வறட்சியடைவது தடுக்கப்படுவதோடு, தலைமுடியும் நன்கு ஊட்டச்சத்துடன் இருக்கும்.

ரோஸ் வாட்டர் – முல்தானி மெட்டி 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் 5 துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, தலைமுடி உதிர்வதும், உடைவதும் தடுக்கப்படும்.

ரோஸ் வாட்டர் – விளக்கெண்ணெய் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயுடன் 4 துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தலையில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால், முடி நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

ரோஸ் வாட்டர் – வெங்காய சாறு 2 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றுடன் 5 துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தலையில் தடவி 1 மணிநேரம் கழித்து, மைல்டு ஷாம்பு போட்டு அலசினால், நரைமுடி பிரச்சனை நீங்கும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால் தலைமுடி பிரச்சனைகள் அகலும்.

15 1487140286 5 rosewater

Related posts

முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெய்

nathan

கூந்தலுக்கு உடனடியாக போஷாக்கும் ஊட்டச்சத்தும் கொடுக்கும் வாழைப்பழ ஹேர் மாஸ்க்

nathan

நரை முடியை தடுக்கும் கடுகு எண்ணெய்

nathan

கூந்தல் உதிர்வுக்கு காரணமும் – வீட்டு சிகிச்சையும்

nathan

உங்களுக்கு தலை சீவும் போது முடி கொத்தா கையோடு வருதா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

தீவிரமான பொடுகு தொல்லையா? வெங்காயச் சாறை உபயோகப்படுத்தும் வழிகள்!!

nathan

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் தலைக்கு குளித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

கூந்தல்: பொடுகுப் பிரச்னை

nathan