25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
smile pics 13
மருத்துவ குறிப்பு

இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்… ஒவ்வொரு நாளும் இனிய நாளே!

நாம் மாற வேண்டும்.
.
.
.
.
.
.
.
.

இந்த மூன்று வார்த்தைகளை கொண்ட வாக்கியத்தை படித்தவுடன் நாம என்னடா தப்பு பண்ணுனோம், நம்மள எதுக்கு மாற சொல்றாங்க, நாம ஜாம் ஜாம்னு நல்லாதானே இருக்கோம்னு உங்கள் மனசுல தோன்றியதா? கையக் குடுங்க பாஸ்! நீங்க இந்த கட்டுரையை அவசியம் படிச்சே ஆகணும். சரி என்னதான் சொல்றானுங்கனு பாப்போம்னு படிக்க ஆரம்பிச்ச குரூப்பா நீங்க? உங்களுக்கும் வாழ்த்துக்கள் பாஸ், நீங்க கட்டுரையை படிச்சு முடிச்சதும் நல்லா இருந்ததுன்னு ஃபீல் பண்ணுனீங்கனா கண்டிப்பா ஷேர் பண்ண மறந்துடாதீங்க.

சரி விஷயத்துக்கு வருவோம். செல்ஃப் டெவலப்மென்ட் என்பது தன்னை தானே மெருகேற்றிக் கொள்ள வேண்டிய விஷயம். பணம் சம்பாதி, புகழைச்சேர், குடும்பத்தை கவனி… இத்யாதி இத்யாதிகளை எல்லாம் தாண்டி தன்னை நேசித்தல் என்பது தான் மனித இனத்துக்கு மிகவும் முக்கியமான விஷயம். தன்னை நேசிக்காத மனிதனால் வாழ்ந்த…வாழுகின்ற…வாழப்போற வாழ்க்கைக்கு ஒரு முழுமையே இருக்காது. நாம ஒரு பைக் வாங்குறோம்னு வச்சுக்குவோம், அதுக்கு இரண்டு மூணு மாசத்துக்கு ஒருதடவையாது சர்வீஸ் விட்டு பைக்க சுத்தம் பண்ணினா தானே மீண்டும் சிறப்பா ஓடும். ஆனா நம்ம வாழ்க்கைல நம்மை பற்றிய நேர்மையான சுய மதிப்பீடை நாம செஞ்சுருக்கவே மாட்டோம், நம்ம கிட்ட என்ன பிளஸ், எது மைனஸ்ன்னு நம்மில் பாதி பேருக்கு தெரியாது.விளைவு ஒரு கட்டத்தில் எது செஞ்சாலும் நிம்மதியில்லைனு ஒன்னு சாமியார் காலிலோ இல்ல லட்சக்கணக்கில் பீஸ் வாங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமோ பலர் மாட்டிக்கொள்கிறார்கள். நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள, நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் முக்கியமான ஐந்து டிப்ஸ் இங்கே.

1. லாங்க்வேஜ மாத்துங்க ப்ரோ : –

பொதுவா நம்ம மூளை ‘அலார்ட்டாய்க்கடா ஆறுமுகம்’ மோடுல தான் பெரும்பாலும் இருக்கும். படிக்கட்டுல ஏறும்போது, பைக்ல போகும்போது, வெயில்ல ரொம்ப நேரம் நிக்கும்போதுன்னு எப்பவுமே நம்ம மூளை அலர்ட்டா வேலை பாத்துகிட்டு தான் இருக்கும். இதெல்லாம் ஏன்னு கேட்டா டிசைன் அப்பிடி. மனிதனுக்கு பொதுவாக பாதுகாப்பு உணர்வு ரொம்பவே அதிகம். இதனால் டிஃபன்ஸிவ் மோட்ல தான் பெரும்பாலானவர்கள் சுத்துகிறார்கள். யாரைப் பார்த்தாலும் தன்னையறியாமல் பயம், நடுக்கம் எல்லாம் வந்துரும். குறிப்பா அலுவலகத்தில் சிலர் மேலதிகாரிகளை பார்த்தாலே நடுங்குவார்கள், ஒரு சிலர் போலீசாரை பார்த்தாலே இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிட‌ணும்டா தம்பின்னு ஒதுங்கிச்செல்வார்கள். இது எல்லாமே நம்மகிட்ட நெகட்டிவ் மைண்ட்செட் இருக்குங்கிறத தெளிவாக கட்டம் போட்டு காட்டிக்குடுத்துடும். யாரைப் பாத்தாலும் முகத்துக்கு நேராப் பாத்து கண்களை பார்த்து பேசுறதுக்கு முதலில் கத்துக்கணும். எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் சரி, மனச்சோர்வை உடலில் காண்பிக்கவே கூடாது. கம்பீரமும், மிடுக்கும் நமது மனச்சோர்வை உடைத்து நம்மை புத்துணர்ச்சியடையச் செய்யும்.

2. குறிக்கோள் வை ! அதை நோக்கி ஓடு!

ரஜினிகாந்த் ஒரு மேடையில் பேசும்போது இப்படிச்சொன்னார். "இன்னிக்கு நாம இருக்குற நிலைமைக்கு காரணம் நேற்று நாம செஞ்ச வொர்க். நேற்றைய உழைப்பின் பயனை இன்னிக்கு அடைஞ்சிட்டு இருக்கோம். இன்னிக்கு நாம எப்படி உழைக்கிறமோ அதோட பயனை தான் நாளை அனுபவிக்க போறோம். எனவே எதிர்காலத்தை குறித்து கவலைப்படாதே. எதிர்காலம் உன் கையில்" என்றார். இதை அப்படியே நாமளும் பின்பற்றலாம். நாம வாழ்க்கையில் எந்த வயசுல எந்த ரேஞ்சுல எந்த எடத்துல இருக்கணும்னு முடிவு பண்ண வேண்டியது நாமதான். குறிக்கோளை நாம அடைகிறோம், அடையவில்லை என்பது பிரச்னை இல்லை. ஆனால் குறிக்கோளை நோக்கி ஒடினோமா என்பது தான் கேள்வி. அது மட்டும்தான் மன திருப்தியை தரும்.

குறிக்கோள் என்றவுடனே வீடு கட்ட வேண்டும், 45 வயதில் கோடீஸ்வரனாக வேண்டும் என்பது தான் என நினைத்து, மை கோல் ஈஸ்னு ஒரு டைரில எழுதி வீட்டுல எங்கயாச்சும் தூக்கிப்போட்டுட கூடாது பாஸ். பெரிய குறிக்கோள் என்பது இருக்க வேண்டியது தான் ஆனால் குட்டிக்குட்டி குறிக்கோளும் அவ்வப்போது இருக்க வேண்டும். ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிடுவது, மாதம் ஒரு புத்தகம் படிப்பது, பிடித்த இடத்துக்கு டூர் செல்வது, கிடார் கற்றுக்கொள்வது, போட்டித் தேர்வில் பாஸாவது, ஐம்பது பரோட்டாவை ஒரே நேரத்தில் சாப்பிடுவது என எப்போதும் சின்னச் சின்ன குறிக்கோள்களை வைத்து அதனை அடைய பழகுங்கள். அதுவே உங்களுக்கு பெரிய குறிக்கோளை அடைய பெரும் மன வலிமையைத்தரும்.

3. ரிலாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள் : –

நமக்கு மிகப்பெரிய எதிரி யார் தெரியுமா? ஸ்ட்ரெஸ் தான். உடலையும், மனதையும் ஒரு சேர இது பாதிக்கும். ஸ்ட்ரெஸ்ஸை போக்க ஒரே வழி ஆன்டி ஸ்ட்ரெஸ் விஷயங்களை கண்டுணர்ந்து செய்வது தான். நமது சமூகத்தில் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்றால் நண்பர்களுடன் கூட சேர்ந்து குடிப்பது, சிகரெட் பிடிப்பது, தியேட்டருக்கு செல்வது, உணவகம் செல்வதுதான் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. இவையெல்லாமே தற்காலிக நிவாரணிகள் மட்டுமே. தவிர, இவற்றில் சில உடலுக்கு கேடானவையும்கூட. உங்களை ஏதாவதொரு புது செயலில் ஈடுபடுத்தும் போது தான் மன அழுத்தம் முற்றிலுமாக நீங்கும். ஓவியம் வரைவதோ, சுற்றுலா செல்வதோ, எழுதுவதோ, கார் ஓட்டுவதோ எதாவது ஒரு நல்ல விஷயம்.. அது உங்களுக்கு பிடிப்பதாக இருக்க வேண்டும்… அதைச் செய்யுங்கள். அவை தரும் அனுபவம் உங்களை ஊக்கமூட்டுவதாக இருக்க வேண்டும். உங்களுக்கான ஆரோக்கியமான ஸ்ட்ரெஸ் பஸ்டர் எதுவென்பதை முடிவு செய்ய வேண்டியதும் கண்டுணர வேண்டியதும் நீங்கள் தான்.

4. கிரியேட்டிவாக இருங்கள் :-

உங்களுக்குள்ளே நிச்சயம் ஒரு பிரமாதமான கிரியேட்டர் இருக்கிறார் பாஸ். சின்ன சின்ன விஷயங்களுக்கும் கிரியேட்டிவாக யோசியுங்கள். உங்கள் ரூமையோ, வீட்டையோ குட்டிக் குட்டி கிரியேட்டிவ் விஷயங்களால் அழகாக்குங்கள். உங்களுக்குள் ஒரு கவிஞரோ, திரைக்கதை ஆசிரியரோ, கதாசிரியாரோ இருந்தால் அதை வெளியே கொண்டு வாருங்கள். கையில் கிடைக்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி அதை வித்தியாசமாக எப்படி பயன்படுத்தலாம் என்பதை யோசியுங்கள். படிப்பிலோ, வேலையிலோ, பிசினஸிலோ கிரியேட்டிவ் விஷயங்களை புகுத்துபவர்கள் தான் பின்னாளில் வெற்றியாளர்களாக உருவாகிறார்கள்.கிரியேட்டிவில் நல்ல கிரியேட்டிவ், கெட்ட கிரியேட்டிவ் என ஒன்றும் கிடையாது எனவே பயப்படாமல் உங்கள கற்பனைச் சிறகை விரியுங்கள்.

5. நீங்கள் ஏன் வாழவேண்டும்?

நாம எதுக்கு உயிர்வாழறோம், நமக்கு என்ன தேவை, நம்முடைய குறிக்கோள் என்ன.. போன்ற பல கேள்விகளுக்கு நமக்கே சரியான பதில் தெரியாது. எது உங்களுக்கு நிம்மதியை தரும் என்றொரு கேள்வியை யாரிடம் கேட்டாலும் ஒரு லிஸ்ட் அடுக்குவார்கள். ஆனால் நிஜத்தில் அவை கிடைத்திட்டாலும் அவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள் என்பது தான் நிதர்சனம். சரி இதற்கு எது சரியான தீர்வு என்கிறீர்களா? ‘பிடித்ததை செய்.. பிடித்தமாதிரி வாழ்!’ என்பது தான் பதில்.

எல்லாரும் படிக்கிறார்கள், பத்தாவதில் ஸ்டேட் பர்ஸ்ட் எடுத்து, பன்னிரெண்டாவதில் 199 கட் ஆப் வாங்கி மருத்துவமோ, பொறியியலோ சேர்ந்து அங்கே எந்நேரமும் படித்து பிறகு நான்கு அல்லது ஐந்து இலக்கங்களில் சம்பளம் வாங்குகிறார்கள், கார் பங்களா என செட்டில் ஆகிறார்கள். வருடம் இரண்டு வெளிநாட்டு டூர் செல்கிறார்கள், ஃபாரின் சரக்கு அடிக்கிறார்கள் என இன்னொரு நபரின் வாழ்க்கையை பார்த்து காப்பி அடித்து வாழ வேண்டாம். உங்களுக்கு ஐரோப்பாவை சுற்றுவதோ, காசியில் திரிவதோ, இமயமலை ஏறுவதோ, முனைவர் பட்டம் வாங்குவதோ, ராணுவத்தில் சேருவதோ, சமூகத்துக்காக உழைப்பதோ எது பிடிக்குமோ அதைச் செய்யுங்கள். அதற்கு தெளிவாக திட்டமிடுங்கள், அதற்கான உழைப்பை கொட்டுங்கள். மனது முழுக்க வேறொரு ஆசையை நிறைத்துக்கொண்டு போலி வாழ்க்கையை வாழ்வதில் எந்த அர்த்தமும் கிடையாது என்பதை உணருங்கள். சேஃப்டியாக வாழ வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இன்னொருவரின் விருப்பத்துக்கு உங்கள் உடலை ஊடகமாக தராதீர்கள். அது எந்தக் காலத்திலும் மன நிம்மதியை தராது.smile pics 13

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின்மை – காரணங்களும் தீர்வும்

nathan

தாய்மைப்பேறு அடைய ஆயுர்வேத மருத்துவம்!

nathan

எலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்?

nathan

மலச்சிக்கலை இல்லாமலே செய்யும் வாழைப்பழம்….!!!

nathan

பீட்ரூட்டின் சில மருத்துவப் பயன்

nathan

விவாகரத்துக்கு முன்பும்.. பின்பும்..

nathan

புதிய ஆய்வு ! குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை பிற்காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் அவதிப்படுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை தமிழர்களின் மருத்துவ முறைப்படி குணப்படுத்தலாம?

nathan

எலுமிச்சை சாறு

nathan