30.3 C
Chennai
Wednesday, Jul 16, 2025
201706241520039750 sunday special Muniyandi Vilas Chicken Curry SECVPF
அசைவ வகைகள்

முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

நாளை (ஞாயிற்றுக்கிழமை) முனியாண்டி விலாஸ் ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை எப்படி அசத்துவது என்று பார்க்கலாம்.

சன்டே ஸ்பெஷல் முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1 கிலோ (தோல் நீக்கியது)
வெங்காயம் – 3 பெரியது
தக்காளி – 3 மீடியம் சைஸ்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தே.அளவு
அரைத்த தேங்காய் விழுது – 1/2 கப்
கறிவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லி இழை – 10 தண்டுகள்
வெங்காயத்தாள் – 1 தண்டு (optional)
எண்ணெய் – 3 டே.ஸ்பூன்

அரைக்க :

இஞ்சி – 2 இஞ்ச் அளவு
பூண்டு – 10 பெரிய பல்
வரமிளகாய் – உங்கள் சுவைக்கு ஏற்ப
கிராம்பு/லவங்கம் – 10
பட்டை – 2 இஞ்ச்
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கசகசா – 1/2 டீஸ்பூன்

செய்முறை :

* முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

* சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* தக்காளி, வெங்காயத்தாள், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* ஒரு அடி கனமான அழமான பத்திரத்துல 3 டே.ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* பச்சை வாசனை போன பிறகு நீளமா நறுக்கி வச்ச வெங்காயம் கூட கொஞ்சமா உப்பு சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கணும்.

* இப்போ மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிக்கன் மசாலா தூள் சேர்த்து 1 நிமிஷம் கிளறவும்.

* அடுத்து அதில் நறுக்கின தக்காளி, கறிவேப்பிலை சிறிதளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கணும்.

* இந்த ஸ்டேஜ்ல சிக்கன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக விடவும். தண்ணீர் விட தேவையில்லை. வேகும் போது சிக்கனில் இருந்து தண்ணீர் விடும். அதுவே போதுமானது.

* சிக்கன் நன்றாக வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நல்ல கொதிக்க விட்டு எண்ணெய் மிதக்கும் போது அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்தாள் சேர்த்து கிளறி மூடி வச்சுடுங்க.

* சூப்பரான முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு ரெடி.

* இது ரைஸ், பரோட்டா, சப்பாத்தி, குஸ்கா, பிரியாணி எல்லாத்துக்குமே நல்ல காம்பினேசன். 201706241520039750 sunday special Muniyandi Vilas Chicken Curry SECVPF

Related posts

செட்டிநாடு மட்டன் கிரேவி செய்வது எப்படி?

nathan

சுவையான கோழி கட்லட் இலகுவான முறையில் வீட்டிலேயே செய்யலாம்…

sangika

நண்டு பிரியாணி.! செய்வது எப்படி.!

nathan

கோழி ரசம்

nathan

சுவையான கிராமத்து மீன் குழம்பு

nathan

கொத்துக்கறி புலாவ்

nathan

அயிரை மீன் குழம்பு செய்ய தெரியுமா…?

nathan

வாளைமீன் குழம்பு ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள் அப்புறம் கார்த்திகை மாதம் எப்போது வருமென்று காத்து இருப்பீர்கள்.

nathan

முப்பதே நிமிடங்களில் மொறுமொறு சிக்கன் பக்கோடா!

nathan