25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
​பொதுவானவை

மாமியாரிடம் மருமகள் கூறும் பொய்கள்

மாமியாரிடம் மருமகள் கூறும் பொய்கள்

விருப்பத்துடனோ அல்லது விருப்பம் இல்லாமலோ நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல பொய்களைக் கூறி தான் வருகிறோம். யாரையும் பாதிக்காத வகையில் கூறப்படும் பொய்களில் எந்த ஒரு தவறும் இல்லை. திருமணமான பெண்கள் பலரும் தன் மாமியாரிடம் தான் அடிக்கடி பொய் சொல்வதாக கூறப்படுகிறது.பொதுவாக பெண்களுக்கு ஒத்துப்போகாதவர்கள் என பார்த்தால் கண்டிப்பாக அவர்களின் மாமியார் அந்த பட்டியலில் இருப்பார்கள். அதனால் அவர்களிடம் பெண்கள் பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட தான் செய்யும். பெண்கள் தங்கள் மாமியாரிடம் அப்படி என்ன தான் பொய் சொல்கிறார்கள்? என்பதை பாருங்கள்…

• மாமியார்களிடம் பொய் சொல்லும் போது, பெண்கள் பகடை காயாய் பயன்படுத்துவது தங்கள் கணவன்மார்களை தான். சொல்லப்போனால், தங்கள் மாமியாரிடம் இருந்து அனுமதிகளைப் பெறுவதற்கு தங்கள் கணவனை பயன்படுத்திக் கொள்வதை சில பெண்கள் ஒத்துக் கொண்டுள்ளனர்.

பெண்கள் டின்னருக்கு வெளியே செல்ல வேண்டுமானால், தன் கணவனை தான் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். என் கணவர் பார்ட்டிக்கு செல்ல விரும்புகிறார் என்றும் என்னையும் உடன் அழைக்கிறார் என்றும் மாமியாரிடம் கூறுகிறார்கள். இதனால் மாமியார்கள் அதற்கு மறுப்பு தெரிவிப்பதில்லை.

•  அனைத்திலும் மூக்கை நுழைக்கும் மாமியாரை சந்திக்காமல் தவிர்க்க வேண்டுமானால், “எனக்கு வேலையுள்ளது”, “எனக்கு உடம்பு சரியில்லை”, “எனக்கு நேரமில்லை” என்ற பொய்களை பொதுவாக பெண்கள் கூறி விடுவார்கள். சில நேரங்களில் அது உண்மையாக இருந்தாலும் கூட, இதனை ஒரு சாக்காக தான் பயன்படுத்துகிறோம் என் பல பெண்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

• மாமியார்கள் வாங்கி தரும் பரிசு பொருட்கள் மருமகள்களுக்கு பிடிப்பதில்லை. அந்த பரிசுகள் எப்படி இருக்கிறது என் அவர்களிடம் கேட்கும் போது, “இது மிக அழகிய ஆடை. ஆனால் இதை அணிவதற்கான சிறந்த நிகழ்வுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.”, “இந்த கப் மிக அழகாக உள்ளது, இதனை தினமும் பயன்படுத்தி இதன் அழகையோ கெடுக்க நான் விரும்பவில்லை” போன்ற பொய்களை கூறுவது இயல்பான ஒன்று தான். ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மை என்னவென்றால் இந்த பரிசுகள் உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது; அதனை வருங்காலத்தில் யாருக்காவது அப்படியே நீங்கள் பரிசாக கொடுத்து விடுவீர்கள்.

• தங்கள் தோழிகளுடன் நேரத்தை செலவழிக்க மருமகள்கள் தங்கள் மாமியார்களிடம் கூறும் பொதுவான பொய்களில் இதுவும் ஒன்றாகும். வார இறுதியில் தோழியை சந்திக்க வேண்டும் என்றால் அப்படிப்பட்ட நேரங்கய்ல அவர்கள் மாமியாரிடம் அலுவலகத்தில் அவசர வேலை இருக்கிறது  என்று கூறிவிடுவார்கள். விடுமுறை தினத்தில் திடீரென வேலை வருவது நடக்க கூடிய ஒன்று தான். ஆனால் அதையே ஒரு சாக்காக வைத்து உங்கள் நண்பர்களை சந்திக்க நீங்கள் செல்லலாம் தானே!

• குழந்தைகள் பிறந்து விட்டால், உங்களுக்கு பிடிக்காத மாமியார் கூட நல்ல விதமாக தோன்றுவார்கள். குழந்தைகளை மிக அருமையாக பராமரிப்பதாக மாமியாரிடம் பெண்கள் கூறுவார்கள். பல நேரங்களில், குழந்தைகளை மாமியார்கள் பார்த்துக் கொள்வதற்காக பெண்கள் கூறும் பொய்கள் இவை. மாமியாருக்கும், தன் கணவனுக்கும் உள்ள நெருக்கத்தை ஒரு பெண் விரும்பாவிட்டாலும் கூட, தன் குழந்தையை பார்த்துக் கொள்ள உதவி வேண்டும் என்பதால், மாமியாரோடு அனுசரித்து செல்வார்கள் பெண்கள்.

• சமையல் செய்வதில் இருந்து பெண்கள் தப்பிக்க கூறும் பொய் இது. அதாவது மாமியார் செய்யும் சமையல் மிகவும் நன்றாக இருப்பதாகவும் இதே போல் வேறு எங்கும் சாப்பிட்டதில்லை என்றும் கூறுவார்கள். மேலும் காலையில் எழுந்த உடனோ அல்லது வேலையில் இருந்து மாலையில் வந்தவுடனோ உங்கள் கையால் போட்ட டீயை குடித்தால் தான் அன்றைய பொழுதே நன்றாக இருப்பதாக மாமியாரிடம் பொய் கூறுவார்கள். அதற்கு காரணம் சமையல் வேலை செய்வதில் இருந்து தப்பிக்க தான்.

Related posts

ஓட்ஸ் கீர்

nathan

கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

nathan

சுவையான சத்தான மொச்சை சுண்டல்

nathan

கேரளா இறால் கறி,TMIL SAMAYAL

nathan

முட்டை நூடுல்ஸ் / Egg Noodles tamil

nathan

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்

nathan

இஞ்சி தொக்கு : செய்முறைகளுடன்…!

nathan

ருசியான வீட்டு நெய் செய்வது எப்படி?

nathan

கணவன் – மனைவி ஆனந்தமாய் வாழ வேண்டுமா?

nathan