பொன்னாங்கண்ணி கீரை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் எனினும் அதிலே பொதிந்துள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொன்னாங்கண்ணிக்கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது.அதுபோலவே மஞ்சள் கரி சாலையும் பொன் சத்தை பெற்றிருக்கிறது. பொன்னாங்கண்ணி ஓர் அற்புதமான உடற்தேற்றி. இன்றைக்கு தங்கபஸ்பம் என்பது மன்னர்களுக்குக் கூட எட்டாத ஒரு மருந்தாகிப்போனது. ஆனாலும் இறைவன் அதை ஏழைகளும் பெறும் விதத்தில் பொன்னாங்கண்ணியில் பொதிந்து வைத்திருப்பது வியக்கத்தக்க ஒன்றாகும்.
நவீன மருத்துவத்தில் கோல்ட் குளோரைடு என்று தங்கத்தை உப்பு நிலையில் மாற்றி மருந்தாகக் கொடுப்பர். இது உடல் வலியைப் போக்கக் கூடியது மட்டுமின்றி உடலுக்கு பலத்தையும் தரவல்லது. பொன்னாங்கண்ணி தாய்ப்பாலை பெருக்கக் கூடிய ஒன்று. பித்தப்பை சீர்பெற இயங்கச் செய்யக் கூடியது. பொன்னாங்கண்ணி தூக்கத்தை தூண்டக் கூடியது.
மத்திய நரம்புக் கூட்டத்தை சீர் செய்து சாந்தப்படுத்தக் கூடியது. இதனால் பல்வேறு நரம்பு நோய்கள் இல்லாமல் போகின்றன. பொன்னாங்கண்ணி ஞாபக சக்தியைத் தூண்டக் கூடியது. கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது. தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது. பொன்னாங்கண்ணி சாறு பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது.
எவ்வகையிலேனும் ஏற்படும் ரத்த வாந்தியை நிறுத்தக் கூடியது. பொன்னாங்கண்ணி ஈரலை பலப்படுத்தவல்லது. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகக்கூடியது. பொன்னாங்கண்ணிக் கீரையை உள்ளுக்கு சாப்பிட்டுவதாலும் எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு தலைக்குத் தடவுவதாலும் தலைமுடி நன்கு செழுமையாக வளரும்.
உடலும் உஷ்ணம் நீங்கி குளிர்ச்சி பெறும். பொன்னாங்கண்ணி கீரையை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் ரத்த அழுத்தம் குறைவு படும். இரையரைக் கோளாறுகள் இல்லாமல் போகும். கொனேரியா என்னும் பால்வினை நோய் குணமாகும். பொன்னாங்கண்ணிக் கீரை ஆண்களின் மலட்டுத் தன்மையையும் இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்தாகும்.
பொன்னாங்கண்ணியை மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தும் போது முகப்பருக்கள் போவதோடு கரும்புள்ளிகளும் காணாமற் போகும். முகம் பொலிவுடன் திகழும். பொன்னாங்கண்ணி சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் சத்து நிறைந்த உணவாகி அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஓர் துணை மருந்து ஆகிறது.
பொன்னாங்கண்ணி சிறுநீரைப் பெருக்கும் தன்மை உடையது. பேதி மற்றும் சீதபேதியை கண்டிக்க வல்லது. தலைவலி, தலைச்சுற்றலை தணிக்க வல்லது. குடலிறக்க நோய் ஆன ஹெர்னியா தணிவதற்குத் துணையானது. பொன்னாங்கண்ணி நெஞ்சு சளியைக் கரைக்க வல்லது. மார்பு இறுக்கத்தைப் போக்கவல்லது.
ஆஸ்துமா போன்ற நுரையீரல் கோளாறுகளையும் அகற்ற வல்லது. பொன்னாங்கண்ணி நுண்கிருமிகளை அழிக்க வல்லது. பொன்னாங்கண்ணி புண்களை ஆற்றக் கூடியது. பொன்னாங்கண்ணி ஈரலைப் பாதுகாக்க கூடியது. ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை போக்கி புற்று நோய் வரா வண்ணம் தடுக்க கூடியது. உடலுக்கு உற்சாகம் தரவும் வல்லது.
ரத்தத்தில சேரும் சர்க்கரை மற்றும் கொழுப்புசத்தை குறைக்க வல்லது. ரத்தத்தில் சேரும் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்தை குறைக்க வல்லது. பூஞ்சைக் காளான்களைத் துரத்த வல்லது. பொன்னாங்கண்ணி ஞாபக சக்தியைத் தூண்டக் கூடியது. மூளைக்கு குளிர்ச்சி தரவல்லது.
பொன்னாங்கண்ணி மருந்தாகும் விதம்:
பொன்னாங்கண்ணியை உப்பு சேர்க்காமல் வேக வைத்து இளஞ்சூட்டோடு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவு பெறும். கண் நோய்கள் விலகும். பொன்னாங் கண்ணிகீரையை நன்கு மைய அரைத்து அதை நீர் நிரப்பிய மண்பானை மீது அப்பி வைத்திருந்து மறு நாள் காலையில் எடுத்து கண்களின்மேல் வைத்து சிறிது நேரம் கட்டி வைத்திருந்து அவிழ்க்க கண் நோய்கள் பலவும் குணமாகும்.
பொன்னாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய், நெல்லிக்காய் சாறு பசுவின் பால், கரிசலாங்கண்ணிச் சாறு இவை சம அளவு எடுத்து இதனோடு சிறிதளவு அதிமதுரத்தை பாலில் அரைத்து சேர்த்து காய்ச்சி மெழுகு பதத்தில் வந்ததும் வடிகட்டி தலைக்கு தேய்த்து தலை முழுகி வர 96 வகையான கண் நோய்களும் தொலைந்து போகும்.
பொன்னாங்கண்ணி கீரையை வதக்கி உடன் மிளகு, உப்பு போதிய அளவு சேர்த்து கற்ப மருந்தாக ஒரு மண்டலம் உண்ண உடலுக்கு வனப்பு, பொன் நிறம், கண்களுக்குக் குளிர்ச்சி ஆகியன உண்டாகும் புகைச்சல், ஈரல் நோய்கள் போன்றவை குணமாகும்.
ஒரு பிடி பொன்னாங்கண்ணி கீரையை காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்று விட்டு பசும்பால் அருந்தி வர உடல் குளிர்ச்சி பெற்று ஈரல் நோய்கள் இல்லாது போகும். கண் நோய்கள் நீங்கிப் பார்வையும் தெளிவு பெறும்.
எலுமிச்சம்பழ அளவு பொன்னாங்கண்ணியின் வேரை எடுத்து சுத்திகரித்து 2 லிட்டர் எருமைப் பால் விட்டு கலக்கி காய்ச்சி தயிராக உறைய வைத்து கடைந்தெடுத்த வெண்ணெயை 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு விட்டு மோரையும் குடித்துவர சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், சிறுநீர் எரிச்சல் ஆகியன குணமாகும்.
பொன்னாங்கண்ணிக்கீரை பொன்மேனி தருவதோடு கண்களுக்கு நன்மையும், தலைமுடிக்கு வளத்தினையும், ரத்தப் பெருக்கையும், உடல் குளிர்ச்சியையும் தரக் கூடிய பொன்னான கீரை என்பதை நினைவில் நிறுத்தி நித்தமும் பயன்படுத்துவோர் நூறாண்டு வாழ்வர்.