சாதம், தயிர் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவல். இன்று இந்த வறுவல் செய்முறையை பார்க்கலாம்.
சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு – 200 கிராம்
வெங்காயம் – 1
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 அல்லது 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்றவாறு
செய்முறை :
* மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை உரித்து விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் உருளைக் கிழங்கைப் போட்டு சற்று வதக்கவும்.
* அதன் பின் அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டி விடவும்.
* அனைத்து சேர்த்து வரும் போது கடைசியில் மிளகுத்தூளைத் தூவி, மீண்டும் நன்றாகக் கிளறி விடவும்.
* அடுப்பை சிறு தீயில் வைத்து, உருளைக்கிழங்கை அடிக்கடி திருப்பி விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை அல்லது கிழங்கு பொன்னிறமாகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.
* சூப்பரான சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெடி.