அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள் (தண்டு), வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது.
மேலும் சிறுநீரகக் கோளாறுகள் (சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட), ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டல், உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சுச்சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடற்சோர்வு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களையும் போக்க வல்லது.
மேற்கூறிய நோய்கள் மட்டுமின்றி பின்வரும் பெயர்களுடைய ஏராளமான நோய்களையும் அறுகம்புல் வேரறுக்க வல்லது. அவை பின்வருமாறு:-
T-cells attacking cancer cell illustration of microscopic photos
1.புற்று நோய்க்கு எதிரானது.
2.சர்க்கரை நோயை சீர் செய்ய வல்லது.
3.வயிற்றுப் போக்கை குணப்படுத்துவது.
4. குமட்டல், வாந்தி இவற்றை தணிக்கக் கூடியது.
5.நுண்கிருமிகளைத் தடுக்க வல்லது.
6.உற்சாகத்தைத் தரவல்லது. (ரத்தத்தில் பிராணவாயுவை அதிகப்படுத்த வல்லது).
7.மூட்டுவலிகளைத் தணிக்கக் கூடியது.
8.கிருமித் தொற்றினைக் கண்டிக்க வல்லது.
9.வற்றச் செய்வது.
10.அகட்டு வாய் அகற்றி.
11.கருத்தடைக்கு உகந்தது.
12.குளிர்ச்சி தரவல்லது.
13.மேற்பூச்சு மருந்தாவது.
14.சிறுநீரைப் பெறுக்க வல்லது.
15.கபத்தை அறுத்து வெளித்தள்ளக் கூடியது.
16.ரத்தத்தை உறையவைக்கும் தன்மை உடையது.
17.மலத்தை இளக்கக் கூடியது.
18.கண்களுக்கு மருந்தாவது.
19.உடலுக்கு உரமாவது.
20.ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த கூடியது.
21. காயங்களை ஆற்ற வல்லது.
இப்படி நீண்ட பட்டியலைக் கொண்டுள்ள நோய்களை வேரறுக்க வல்லதாக அருகம்புல் திகழ்கிறது.
அருகம்புல்லில் அடங்கியுள்ள மருந்துப் பொருள்கள் :
அருகம்புல்லில் அடங்கியுள்ள மருந்தும் பொருள்களும் ஒரு நீண்ட பட்டிலை உடையது. அருகம்புல்லில் பின்வரும் மருத்துவ வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன. அவையாவன:
1.மாவுச்சத்து (புரோட்டீன்).
2.உப்புச்சத்து (சோடியம்)
3.நீர்த்த கரிச்சத்து
4.அசிட்டிக் அமிலம்
5.கொழுப்புச் சத்து
6.ஆல்கலாய்ட்ஸ்
7.அருண்டோயின்
8.பி.சிட்டோஸ்டர்
9.கார்போஹைட்ரேட்
10.கவுமாரிக் அமிலச் சத்து
11.ஃபெரூலிக் அமிலச் சத்து
12.நார்ச் சத்து (ஃபைபர்)
13.ஃப்ளேவோன்ஸ்
14.லிக்னின்
15.மெக்னீசியம்
16.பொட்டாசியம்
17.பால்மிட்டிக் அமிலம்
18.செலினியம்
19.டைட்டர் பினாய்ட்ஸ்
20.வேனிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி சத்து ஆகியன பொதிந்துள்ளன.
அருகம்புல்லின் மருத்துவப் பயன்கள்:
அருகம்புல்லின் தண்டுப் பகுதி மற்றும் வேர்ப்பகுதி ஆகியன பாரம்பரியம்மிக்க நாட்டு மருத்துவத்தில் இதயக் கோளாறுகளைப் போக்க உபயோகித்து வரப்படுகிறது. குறிப்பாக மாரடைப்பு , இதய காளங்களின் அழற்சியைத் தடுப்பதாகவும் உள்ளது.
Diabetic patient doing glucose level blood test using ultra mini glucometer and small drop of blood from finger and test strips isolated on a white background. Device shows 115 mg/dL which is normal
சர்க்கரையை குறிப்பாக ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மையுடையது. அருகம்புல்லில் அடங்கியுள்ள மேனிட்டால் மற்றும் சேப்போனின்ஸ் சத்துக்கள் சிறுநீரைப் பெருக்க அல்லது வெளித்தள்ள உதவுகிறது. ஆயுர்வேத மருத்து நூல்கள் அருகம்புல் சற்று காரமுடையது, கசப்புடையது, உஷ்ணத் தன்மை உடையது.
பசியைத் தூண்டக் கூடியது, காயங்களை ஆற்றவல்லது. வயிற்றிலுள்ள பூச்சிகளை, புழுக்களை வெளியேற்ற வல்லது. காய்ச்சலைத் தணிக்க வல்லது, ஞாபக சக்தியைப் பெருக்க வல்லது. மேலும் அறுகம்புல் வாய் துர்நாற்றத்தையும் உடலில் ஏற்படும் கற்றாழை வாடை உட்பட ஏற்படும் வேண்டாத நாற்றத்தையும் போக்க வல்லது. வெண்குட்டம் என்னும் தோல் நோய்க்கு மருந்தாவது.
நெஞ்சகச் சளியைக் கரைக்கக் கூடியது. மூலத்தை குணப்படுத்த வல்லது. ஆஸ்த்துமாவை அகற்ற வல்லது. கட்டிகளை கரைக்க வல்லது. மண்ணீரால் வீக்கத்தைக் குறைக்க வல்லது என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் ஆயுர்வேதப்படி அருகம்புல் பித்த மேலீட்டால் ஏற்படும் வாந்தியையும், தாகம் என்னும் நாவறட்சியையும், பாதங்கள், கைகள் மற்றும் உடலின் எந்தப் பகுதியில் எரிச்சல் கண்டாலும் அதைப் போக்குவதற்கும், வாயில் எப்பொருளைச் சுவைத்தாலும் சுவையை உணர இயலாத நிலையைப் போக்குவதற்கும், நம்மை அறியாமல் உணரும் ஏதோ ஓர் உருவம், ஸ்பரிசம், சப்தம், நாற்றம் சுவை ஆகிய நிலையில் அறுகம்புல் தெளிவைத் தரும்.
அடிக்கடி காக்காய் வலிப்பு வந்து உணர்விழந்து போகுதல் அல்லது உடல் உறுப்புகள் கோணித்து போதல் என்கிற நிலையில் அறுகம்புல் அருமருந்தாகிறது. ஒருவித இனம்புரியாத மயக்கநிலை மறைக்க உதவுகிறது. தொழுநோய்க்கு நல்ல மருந்தாகிறது. சொறி, சிரங்கு, படை போன்ற எவ்வித தோல் நோயானாலும் அருகம்புல் குணம் தரவல்லது.
உள்ளுக்கும் கொடுத்து மேலுக்கும் உபயோகிப்பதால் இப்பயன் நிச்சயமாக கிடைக்ககூடியது ஆகும். அறுகம்புல் உள்ளுக்கு உபயோகிப்பதால் சீதபேதி ரத்தம் கலந்து வருவதாயினும் சீதம் என்னும் சளி கலந்து வருவதாயினும் குணப்படும். மூக்கில் திடீரென ரத்தம் கொட்டுதல் இதை (சில்லி மூக்கு) நோய்க்கும் கைவந்த மருந்தாகவும் உடனடி நிவாரணியாகவும் அறுகம்புல் அமைகிறது.
அருகம்புல் யுனானி மருத்துவத்தில் எரிச்சல் எங்கிருப்பினும் அதைப் போக்கவும், நுகர்வு உணர்வை மேம்படுத்தவும், மலமிளக்கியாகவும் இதயம் மற்றும் மூளைக்கு உரம் ஊட்டவும் வியர்வை தூண்டவும் ஞாபக சக்தியை பெருக்கவும், வாந்தியை தடுக்கவும், தாய்ப்பாலை பெருக்கவும்,
கோழையை அதாவது அடர்ந்த கெட்டிப்பட்ட சளியை உடைத்து கரைத்து வெளியேற்றவும் வயிற்றில் சேர்ந்து வலியை தருகிற காற்றை வெளியேற்றவும், குழந்தைகளுக்கு வந்து அடிக்கடி துன்பம் தருகிற சளியோடு கூடிய காய்ச்சலை போக்குவதற்கும், உடலில் எங்கு வலிஏற்பட்டாலும் ஏற்பட்ட வலியை தணிப்பதற்கும், வீக்கத்தை கரைப்பதற்கும், பல்நோயை குணப்படுத்துவதற்கும், ஈரல் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.