அசைவ வகைகள்

கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா

சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது சைடிஷ் இறால் பெப்பர் மசாலா. இன்று இந்த இறால் பெப்பர் மசாலாவை கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா
தேவையான பொருட்கள் :

இறால் – 250 கிராம்,
பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய் – 2,
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
உடைத்த மிளகு – 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் பால் – 1 கப்,
தேங்காய் பால் – 1 கப்,
கோகம் புளி – 2 சின்ன துண்டுகள்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
கறிவேப்பிலை – 1 கொத்து.

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெயை ஊற்றி இஞ்சி, பூண்டு போட்டு நன்கு வதக்கி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இத்துடன் தக்காளியை சேர்த்து மசிய வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் மசாலாத்தூள்கள் அனைத்தையும் போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின்பு தேங்காய் பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும், இறால், கோகம் புளி போட்டு வேகவிடவும்.

* தேங்காய் பால் நன்கு வற்றியதும், உடைத்த மிளகு, சிறிது எண்ணெய் சேர்த்து இறக்கவும்.

* கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Related posts

சூப்பரான அவதி ஸ்டைல் மட்டன் கபாப்

nathan

கேரளா மீன் குழம்பு

nathan

மட்டன் சில்லி ஃப்ரை

nathan

சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை

nathan

ரமலான் ஸ்பெஷல்: பெப்பர் சிக்கன் வறுவல்

nathan

சன்டே ஸ்பெஷல்: சிக்கன் கோழி பிரியாணி

nathan

சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு

nathan

நெத்திலி மீன் வறுவல்

nathan

வயிற்றுப்புண்ணை ஆற்றும் ஆட்டுக்குடல் குழம்பு

nathan