1493806381 8344
சிற்றுண்டி வகைகள்

மூங்தால் பன்னீர் சப்பாத்தி

தேவையானவை:

கோதுமை மாவு – 2 கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு – முக்கால் கப்
பன்னீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய், பூண்டு – தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்)
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டு, பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பன்னீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு பன்னீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். சுவையான் மூங்தால் பன்னீர் சப்பாத்தி தயார்.1493806381 8344

Related posts

உழுந்து வடை

nathan

ஓட்ஸ் தேங்காய் தோசை

nathan

சீஸ் ரோல்

nathan

அரட்டிப்பூவு போஸா

nathan

குழந்தைகளுக்கான பேபி கார்ன் புலாவ்

nathan

சூப்பரான மொறு மொறு பூண்டு பக்கோடா…

nathan

சத்தான பார்லி வெண் பொங்கல்

nathan

முட்டைகோஸ் செட் ரொட்டி

nathan

மைசூர் பாக்

nathan