30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
21 1450693890 2 garlic
மருத்துவ குறிப்பு

வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ளும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!

குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரையும் தாக்கும் ஒன்று தன் வைரஸ் காய்ச்சல். வைரஸ் கிருமியால் காய்ச்சல் வந்தால், இருமல், தொண்டைப்புண் மற்றும் கடுமையான உடல் வலி ஏற்படக்கூடும். அதுமட்டுமின்றி, வைரஸ் காய்ச்சல் வந்தால், அதனால் குடல், நுரையீரல் மற்றும் சுவார குழாய்கள் போன்றவையும் பாதிக்கப்படும்.

இதனை சரிசெய்ய நம் கிராமப்பகுதியில் ஒருசில வைத்தியங்களை மேற்கொள்வார்கள். அவற்றைப் பின்பற்றினால், விரைவில் வைரஸ் காய்ச்சல் குணமாகும். சரி, இப்போது வைரஸ் காய்ச்சலை சரிசெய்யும் அந்த கிராமத்து வைத்தியங்கள் என்னவென்று பார்ப்போமா!

துளசி இலைகள் ஒரு லிட்டர் தண்ணீரில் துளசி இலைகள் சிறிது மற்றும் 1/2 டீஸ்பூன் கிராம்பு பொடி சேர்த்து நன்கு பாதியாக வரும் வரை கொதிக்க விட்டு, பின் அந்நீரைக் குளிர வைத்து தினமும் 3-4 முறை குடித்து வர, வைரஸ் கிருமிகளை உடலில் இருந்து அழித்து காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.

பூண்டு மற்றும் ஆலிவ் ஆயில் 2 பூண்டு பற்களைத் தட்டி, 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி, பாதங்களில் தடவி, பிளாஸ்டிக் கவரால் கட்டி தூங்கவும். இதனால் காய்ச்சல் குறையும்.

மல்லி ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் மல்லியை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு, பின் அந்நீரை வடிகட்டி, பாலுடன் சேர்த்து, தேன் கலந்து குடித்து வர, வைரஸ் காய்ச்சல் விரைவில் குணமாகும்.

உலர் திராட்சை ஒரு கையளவு உலர் திராட்சையை ஒரு கப் நீரில் போட்டு ஊற வைத்து, பின் அந்த உலர் திராட்சையை நீருடன் சேர்த்து ஓரளவு அரைத்து வடிகட்டி, அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து, தினமும் 2 முறை குடித்து வர வேண்டும்.

இஞ்சி மற்றும் தேன் டீ சிறு இஞ்சி துண்டை எடுத்து தோலுரித்து துண்டுகளாக்கி, ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்து தினமும் 2-3 முறை குடிக்க வேண்டும்.

மூலிகை தேநீர் வைரஸ் காய்ச்சலின் போது மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களைப் பயன்படுத்தி மூலிகை டீ போட்டு குடித்து வர, அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டி, விரைவில் காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றை சரிசெய்து, உடலின் நீர்ச்சத்தை சீராக பராமரிக்கும்.
21 1450693890 2 garlic

Related posts

இந்த 7 அம்சம் உள்ள பெண்ணை திருமணம் செய்யுங்கள்: நீங்க தான் அதிர்ஷ்டசாலி

nathan

உங்க வாய் கப்பு அடிக்குதா? சில எளிய இயற்கை வைத்தியங்கள்!!!

nathan

அளவுக்கு அதிகமாக சர்க்கரையை சேர்த்துக் கொள்வதால் சந்திக்கும் பிரச்சனைகள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

இயற்கையான முறையில் வீட்டில் செய்யப்படும் மருத்துவ குறிப்புகள்

nathan

உங்களுக்கு 30 நொடிகளில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணி பெண்கள் வெளிக்கூற தயங்கும் விஷயங்கள்!

nathan

11 பாசிட்டிவ் பழக்கங்கள்..!

nathan

பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை

nathan

மன அழுத்தத்தைக் குறைக்க வழிகள்!

nathan