குளிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை சந்திக்கும். சருமம் வறண்டு, பிளவு உண்டாகும். சுருக்கங்கள் , எரிச்சல், வறட்சி, என பலவித பாதிப்புகளை சமாளிக்கு எண்ணெய், மாய்ஸ்ரைஸர் க்ரீம் ஆகியவற்றை அடிக்கடி உபயோகப்படுத்துதல் அவசியம்.
உங்கள் சருமத்திலுள்ள வறட்சியை குறைக்கும் விதமாக இந்த பொருள் மிகவும் உதவி செய்கிறது. அது கோகோ பட்டர். கோகோ பட்டரை தொடர்ந்து குளிர்காலத்தில் உபயோகப்படுத்தினால் கீழ்கண்ட நன்மைகள் உண்டாகும்.
அதிகப்படியான ஈரப்பதம் :
சருமத்தில் உண்டாகும் அதீத வறட்சிக்கு கோகோ பட்டர் சிறந்த சாய்ஸாக இருக்கும். இதிலுள்ள கொழுப்பும் அமிலங்கள் நிறைய ஈரப்பதத்தை சருமத்திற்கு தருகின்றன.
சரும பாதிப்பிற்கு : குளிர்காலத்தில் உண்டாகும் சரும பாதிப்பை காப்பாற்றுவதில் கோகோபட்டரை விட சிறந்தது ஏதுமில்லை. உடைந்த சரும செல்களை சரி செய்கிறது.
பளிச்சென்ற முகம் : டல்லாக இருக்கும் சருமத்தை பொலிவாக மாற்றுகிறது. பளபளப்பையும் சுருக்கமில்லா அழகையும் தருகிறது.
எரிச்சலை தடுக்கும் : வறட்சியினால் உண்டாகும் அரிப்பு மற்றும் எரிச்சலை தடுக்கும். குறிப்பாக சென்ஸிடிவ் சருமம் இருப்பவர்கள் கோகோ பட்டரை எடுத்துக் கொண்டால் சிறந்த பலன்களை பெறுவார்கள்.
புத்துணர்வை தரும் : அரோமா தெரபியில் கோகோ பட்டரையும் உபயோகப்படுத்துவார்கள். இதிலுள்ள நறுமணம் மற்றும் பண்புகள் மன அழுத்தத்தை போக்கும். ஆறுதல் அளிக்கும்