27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
15
மருத்துவ குறிப்பு

லேப்டாப்பை பாதுகாக்க 10 வழிகள்!

15

காலைல கண்ணு முழிச்சவொடன லேப்டாப் ஆன் பண்ணி அலுவலக வேலையோ? ஃபேஸ்புக்கோ ஆன் பண்ணி உட்காரும் ஆளா நீங்க? ரயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட் எங்க இருந்தாலும் வேலைன்னு வந்துடுச்சுனா உடனே லேப்டாப்பை ஆன் பண்ணி வேலைய முடிக்குற ஆளா நீங்க. உங்க லேப்டாப் எப்படியெல்லாம் பாதிப்புக்கு உள்ளாகும்.. அதிலிருந்து பாதுகாக்க‌ என்ன வழி இருக்குனு தெரியுமா? ஜி.பி.எஸ். சிஸ்டம்ஸை சேர்ந்த நாகேந்திரனிடம் கேட்டோம்..
1. உங்கள் லேப்டாப்பை அடிக்கடி வெப்பநிலை மாற்றத்துக்கு உட்படுத்தாதீர்கள். உதாரணமாக குளிர்காலத்தில் வெளியில் இருந்து வீட்டுக்குள்ளோ அல்லது அலுவலகத்துக்குளோ வருகிறீர்கள் என்றால் உடனடியாக லேப்டாப்பை ஆன் செய்யாதீர்கள். லேப்டாப் அறை வெப்பநிலைக்கு வரும் வரை காத்திருங்கள். அதற்காக செயற்கையாக வெப்பத்தை அதிகரிக்கும் பணிகளிலும் ஈடுபடாதீர்கள். இது உங்கள் ஹார்ட்வேர், திரை இரண்டையுமே பாதிக்கும். அதனால் லேப்டாப் அறை வெப்பநிலைக்கு வரும் வரை காத்திருந்து ஆன் செய்யுங்கள்.
2.  லேப்டாப்பின் அடுத்த வில்லன் தூசு. நாம் எல்லா இடங்களிலும் லேப்டாப்பை பயன்படுத்துகிறோம் நம்மை அறியாமல் காற்றில் உள்ள தூசு சேர்ந்து விடும். இது லேப்டாப்பின் உள்ள ஏற்படும் வெப்பத்தை குறைக்க தடையாக இருக்கும். அதனால் வருடத்துக்கு ஒரு முறையாவது சர்வீஸ் சென்டர்களில் கொடுத்து முழுமையாக ஒருமுறை உங்கள் லேப்டாப்பை சுத்தப்படுத்துங்கள்.
3. உங்கள் லேப்டாப்பை கூடிய மட்டில் அறை வெப்பநிலையில் சீராக உள்ள இடங்களில் மட்டுமே பயன்படுத்துங்கள். திறந்தவெளி அல்லது வெப்பநிலை அதிகம் உள்ள இடங்களை தவிர்ப்பது நல்லது.

16

4. கார் அல்லது பிற வாகனங்களின் உள்ளே லேப்டாப்பை வைத்துவிட்டு செல்லாதீர்கள். அதில் ஏற்படும் வெப்பநிலை மாறுதல்கள் உங்கள் லேப்டாப்பை கட்டாயம் பாதிக்கும்.
5. லேப்டாப்பை உங்கள் வசதிக்கு ஏற்ப சாதாரண பேக்-களில் கொண்டு செல்ல வேண்டாம். லேப்டாப்புக்கென வழங்கப்படும் பிரத்யேகமான பேக்-களில் மட்டும் பயன்படுத்தவும். அது மட்டுமே உங்கள் லேப்டாப் உடையாமல் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

17

6. உங்கள் லேப்டாப்பை சார்ஜ் போட்டு வைத்திருக்கும்போது, 100 சதவிகிதத்தை பேட்டரி அடைந்தவுடன் சார்ஜரை ஆஃப் செய்து விடுங்கள். இது உங்கள் பேட்டரி மற்றும் மதர்போர்ட் பாதிக்காமல் இருக்க உதவும்.
7. பழைய டூத் ப்ரஷ் கொண்டு அடிக்கடி எக்ஸாஸ்ட் ஃபேன் பகுதியை சுத்தம் செய்யுங்கள். ஏனேன்றால் அங்கு தான் எளிதில் மாசு தங்கும் மேலும் வெப்பமும் அங்கு தான் அதிகரிக்கும்.
8.  உங்கள் லேப்டாப் மேல் புத்தகங்கள் அல்லது கனமான பொருட்களை வைக்காதீர்கள். காரணம் அதிக எடை காரணமாக உங்கள் ஸ்க்ரீன் கீபோர்டில் அழுத்தம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் இது உங்கள் சி.டி ட்ரைவையும் பாதிக்கும்.
9. குறைந்த மின் அழுத்தத்தில் லேப்டாப்பை சார்ஜ் செய்வதை கட்டாயம் தவிருங்கள். அது உங்கள் லேப்டாப்பின் ஹார்ட்வேர்களை பாதிப்பிலிருந்து காக்க பெரிதும் டஉதவும்.
10. உணவுப்பொருட்கள், திரவங்கள் இருக்கும் இடத்தின் அருகில் லேப்டாப்போடு அமர்ந்து வேலை செய்வதை தவிருங்கள். தவறுதலாக பொருட்கள் தவறி லேப்டாப்பில் விழுந்தால் மொத்த லேப்டாப்பும் வீணாகும் அபாயம் உள்ளது.
இந்த பத்து விஷயங்களை கட்டாயம் உங்கள் லேப்டாப்பை பாதிக்காதவாறு கவனமாக இருங்கள். உங்களுக்கு தெரிந்த வேறு பயனுள்ள லேப்டாப் டிப்ஸ்களை கமென்ட்டில் தெரியப்படுத்துங்கள்…

Related posts

தலை அரிப்பை குணப்படுத்தும் மருத்துவம்

nathan

மாதவிடாய் காலத்தில் இந்த விஷயங்களை கண்டிப்பா செய்யாதீங்க

nathan

குழந்தையின் வயிற்று வலியில் கவனம் செலுத்துங்கள்

nathan

மாத்திரைகள் உட்கொள்ளும்முறை எது சரி. எது தவறு?

nathan

கருப்பட்டி வெல்லம் செய்யும் அற்புதங்கள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களின் பிறப்புறுப்பு தூய்மை பற்றிய விஷயங்கள்.! அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

அவசியம் படிக்க..உங்க டூத்பேஸ்ட் ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தும் 4 அறிகுறிகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சின்னம்மைக்கான 6 அறிகுறிகள்!!!

nathan

இரட்டைக் குழந்தைகள் குறித்த சில முட்டாள்தனமான நம்பிக்கைகள்! தெரிந்துகொள்வோமா?

nathan