உடலின் அனைத்து பாகங்களைப் போலவே முடியின் ஆரோக்கியத்திற்கும்,அடர்த்தியான வளர்ச்சிக்கும் உணவும் ஒரு அடிப்படை காரணம் ஆகும். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் முடி நமது உடலின் வெளிப்பகுதியில் இருப்பதால் முடி அடர்த்தியாக,நீளமாக வளர்வதற்கு மயிர்கால்களுக்கு உணவு வழங்க வேண்டும்.
சருமத்தை போன்றே முடியும் சில உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் சேதம் ஏற்படுகிறது ஏனெனில் உடலுக்கு போதுமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்காமல் போவதே காரணம். என்ன ஒன்று சருமத்தின் பாதிப்பு உடனடியாகத் தெரியும்.
ஆனால் முடி வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு தென்பட கொஞ்ச நாட்கள் ஆகும்.சீரற்ற உணவு (அ) ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை முடியின் எண்ணிக்கையைக் குறைத்து அடர்த்தியைக் குறைக்கிறது.
ஆரோக்கியமற்ற முடிக்கு சில காரணங்கள்: அதிகப்படியான புகை. அளவுக்கதிகமாக மது அருந்துதல், முடியை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது.
உணவுகள் : நிறைய உணவுகள் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன.ஆரோக்கியமான அனைத்து உணவுகளும் முடியின் வளர்ச்சிக்கு உதவாது.முடியின் வளர்ச்சிக்கு என்ன ஊட்டச்சத்து தேவை என தெரிந்து கொள்ள வேண்டும். அந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் சேர்க்க வேண்டும்.முடியின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து புரதம் ஆகும்.புரதம் நிறைந்த உணவு அதிகம் எடுப்பதால் முடி அதிக வலிமையாகவும்,எளிதில் உடையாததாகவும் வளர்கிறது.
புரதம் நிறைந்த உணவுகள்: முட்டை, பாதாம் , ஓட்ஸ், பாலாடைக்கட்டி, தயிர், பால் ,ப்ரோக்கோலி, மீன் வகைகள் அனைத்தும், பயறு வகைகள், இறால் வேர்க்கடலை .
ஸ்கால்ப் : ஆரோக்கியமான முடிக்கு ஸ்கால்ப்-பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.ஏனெனில் இந்த ஸ்கால்ப்-பில் தான் பொடுகு போன்றவை ஏற்படும்.ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைப்பதற்கு இரும்புச்சத்து,வைட்டமின்-இ மற்றும் சில அத்தியாவசியமான கனிமங்கள் (காப்பர்,செலினியம்,மெக்னீசியம்) தேவை.
விட்டமின் டி : வைட்டமின்-டி யும் அத்தியாவசியமான ஒன்று.வைட்டமின்-டி சூரிய ஒளியில் கிடைக்கிறது.ஆனால் அதிகப்படியான சூரிய ஒளியினால் முடி சேதமடைய வாய்ப்பு உள்ளது.அதிக புரதம்,வைட்டமின்-இ மற்றும் கனிமங்கள் நிறைந்த உணவுகள் சால்மன் மீன்,முட்டை,கீரை ஆகியவை ஆகும்.
முடியை எப்படி பராமரிக்க வேண்டும்? வாரம் ஒருமுறை (அ) இருமுறை முடியை அலச வேண்டும். முடியை அலச கெமிக்கல் இல்லாத சீகைக்காயை உபயோகிக்கலாம்.ஷாம்பூ உபயோகிப்பவர் எனில் சல்பேட் இல்லாத ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். ஈரமான முடியில் சீப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும்.